×

தொழிலாளர்களைக் கொத்தடிமையாக மாற்ற சட்டத் திருத்தம் செய்யும் மோடி! – தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்

இல்லறமல்லது நல்லறமன்று என்பது தமிழ்வழக்கு. ஆனால் இதற்கு மாறாக, இல்லறமல்லாதவரான யோகி ஆதித்யநாத்தின் ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சி உத்தரப்பிரதேசத்திலும் குதிரை பேரம் மூலம் ஆட்சிக்கு வந்த சிவ்ராஜ் சிங் சௌகானின் மத்திய பிரதேசத்திலும் விநோதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. தொழிலாளர்கள் என்றாலே கொத்தடிமைகள் என்பது போன்ற மாற்றத்தைக் கொண்டு வர மோடி சட்டதிருத்தம் செய்துள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இல்லறமல்லது நல்லறமன்று என்பது தமிழ்வழக்கு.
 

இல்லறமல்லது நல்லறமன்று என்பது தமிழ்வழக்கு. ஆனால் இதற்கு மாறாக, இல்லறமல்லாதவரான யோகி ஆதித்யநாத்தின் ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சி உத்தரப்பிரதேசத்திலும் குதிரை பேரம் மூலம் ஆட்சிக்கு வந்த சிவ்ராஜ் சிங் சௌகானின் மத்திய பிரதேசத்திலும் விநோதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தொழிலாளர்கள் என்றாலே கொத்தடிமைகள் என்பது போன்ற மாற்றத்தைக் கொண்டு வர மோடி சட்டதிருத்தம் செய்துள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“இல்லறமல்லது நல்லறமன்று என்பது தமிழ்வழக்கு. ஆனால் இதற்கு மாறாக, இல்லறமல்லாதவரான யோகி ஆதித்யநாத்தின் ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சி உத்தரப்பிரதேசத்திலும் குதிரை பேரம் மூலம் ஆட்சிக்கு வந்த சிவ்ராஜ் சிங் சௌகானின் மத்திய பிரதேசத்திலும் விநோதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதாவது, அடுத்த மூன்றாண்டுகளுக்கு தொழிலாளர் நலச்சட்டங்களை இடைநிறுத்தம் செய்து சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளனர் ஆட்சியாளர்கள்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக பொருளாதார மந்தம்-நெருக்கடி இருந்துவருகிறது. இந்நிலையில் கொரோனா வந்து, கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கினால் நாடெங்கிலும் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கடந்த ஓராண்டுக்கும் மேலாக இருந்துவரும் பொருளாதார மந்தம்-நெருக்கடிக்கான முழு காரணத்தையும் ஒட்டுமொத்தப் பழியையும் கொரோனாவின் மீது சாட்டி, இந்திய மக்கள் என்ன, உலகையே ஏய்க்கப்பார்க்கிறது ஒன்றிய ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி ஆட்சி!
பொருளாதார மந்தம்-நெருக்கடியிலிருந்து மீள, கார்ப்பரேட்டுகளும் பெருமுதலாளிகளும் மோடி அரசுக்கு வைத்த யோசனை இதுதான். அதாவது தொழிலாளர் நலச் சட்டங்களை முடக்குவது.
இது, நெடுங்கால யோசனைதான் என்பது மோடிக்குத் தெரியாதா என்ன? அதனால் ஏற்கனவே அவர், தொழிலாளர் நலச் சட்டங்களை வெட்டித் திருத்தி 4 தொகுப்புகளாகச் சுருக்கி வைத்திருக்கிறார். அது சட்டப்படி தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாகவே ஆக்கிவிடும் ஒரு சதிச் சட்டத் தொகுப்பாகும். இப்போது இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்று, இந்தக் கொரோனா சமயத்தைப் பயன்படுத்தி, தனது கட்சி ஆட்சியின் கீழுள்ள உத்தரப்பிரதேசத்தையும் மத்தியப்பிரதேசத்தையும் அந்தச் சட்டத் தொகுப்பினை நடைமுறைப்படுத்தப் பணித்துள்ளார் மோடி.
அதன்படி மே 7ந் தேதி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அடுத்த மூன்றாண்டுகளுக்கு தொழிலாளர் சட்டங்களில் பெரும்பாலானவற்றை இடைநிறுத்தம் செய்து அவசரச் சட்டத்தை இயற்றினார்.

“ஒருசில தொழிலாளர் சட்டங்களிலிருந்து தற்காலிக விலக்கு – அவசரச் சட்டம் – 2020” என்ற பெயரிலான இந்த அவசரச் சட்டம், 38 தொழிலாளர் சட்டங்களை நீக்கிவிட்டு, வெறும் 4 சட்டங்கள் மட்டுமே தொடரும் வகையில் இயற்றப்பட்டிருக்கிறது.
கொத்தடிமை முறை தடைச் சட்டம் (1976); கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டம் (1996); ஊதியச் சட்டத்தின் (1936) பிரிவு 5 மற்றும் பணியாட்கள் இழப்பீட்டுச் சட்டம் (1923) மற்றும் பெண்கள்-குழந்தைகள் தொடர்புடைய சில பிரிவுகள் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கிறது இந்த அவசரச் சட்டம். மீதி அனைத்து தொழிலாளர் நலச் சட்டங்களும் 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. மத்தியப் பிரதேச பாஜக அரசு, தொழிற்சாலை சட்டம் மற்றும் மத்தியப் பிரதேச தொழிற்துறை உறவுகள் சட்டம் மற்றும் தொழிற்தகராறு சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்யப் போவதாக மே 7இல் அறிவித்தது. இந்த சட்டதிருத்தம் 1000 நாட்களுக்கு (கிட்டத்தட்ட 3 ஆண்டுகள்) நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவித்தது.
தொழிலாளர்களின் வேலை நிலைமை, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான எவ்வித நெறிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை. சுத்தமாக வைத்திருத்தல், கழிவுகளை அகற்றுதல், காற்றோட்டம், வெளிச்சம், குடிநீர், இயற்கை உபாதைகளுக்கான ஏற்பாடு, ஓய்வறைகள், உணவகம், குழந்தைப் பராமரிப்பகம், வேலை நேரம், விடுமுறை காலங்களுக்கான ஊதியம், பணிபுரியும் தொழிலாளிக்கு தொழில் தொடர்பான நோய் ஏற்பட்டால் உரிய அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பவேண்டிய நடைமுறை உள்ளிட்ட அனைத்திலிருந்தும் ம.பி.யில் புதிதாகத் தொடங்கும் எந்த ஒரு தொழிற்சாலைக்கும் விலக்கு அளிக்கிறது ம.பி. அரசின் இந்தச் சட்டத் திருத்தம்.

தொழிலாளர் நலச் சட்டங்கள் முடக்கம் பற்றி இந்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (IFTU), “இந்தச் சட்டதிருத்தம், தொழிற்சங்கமாகத் திரளுதல், கூட்டு பேர உரிமை உள்ளிட்ட அனைத்து ஜனநாயக உரிமைகளையும் மறுக்கிறது. வேலைநிறுத்தம் செய்யும் உரிமை; பணிநீக்கம், பணியிடமாற்றம் மற்றும் கதவடைப்பிலிருந்து பாதுகாப்பு; அரசாங்கத்திடம் தொழிற்தகராறைக் கொண்டுசெல்லும் உரிமை ஆகியவற்றையும் பறிக்கிறது. வெளிப்படையாகவே தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு, எந்த நேரத்திலும் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்யும் உரிமையை வழங்கியிருக்கிறது. இதில் தொழிலாளர் துறை தலையிட முடியாது” என்று கூறுகிறது.
கொத்தடிமைதான் தொழிலாளி என்று சட்டமாக்க, தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொகுதிகளாக வெட்டித் திருத்திச் சுருக்கியிருக்கிறார் மோடி! அதை அமல்படுத்தி வெள்ளோட்டம் பார்க்கின்றன உத்தரப்பிரதேச, மத்தியப்பிரதேச அரசுகள்! ஆயிரம் ஆயிரம் தொழிலாளர் தம் இன்னுயிரை ஈந்து, 2 நூற்றாண்டுகளாய்ப் போராடிப் பெற்ற உரிமைகளைச் செரிக்கப்பார்ப்பதை பா.ஜ.க அரசே கைவிடு என எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!” என்று கூறியுள்ளார்.