×

திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி; அதிமுக அமைச்சர்கள் கடும் விமர்சனம்!

அமமுக-விலிருந்து விலகிய செந்தில் பாலாஜி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டதற்கு அதிமுக அமைச்சர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். சென்னை: அமமுக-விலிருந்து விலகிய செந்தில் பாலாஜி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டதற்கு அதிமுக அமைச்சர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். தினகரனின் வலதுகரமாக செயல்பட்ட செந்தில் பாலாஜி இன்று தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் பிற்பகல் 12 மணிக்கு மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து அவர் கௌரவித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
 

அமமுக-விலிருந்து விலகிய செந்தில் பாலாஜி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டதற்கு அதிமுக அமைச்சர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

சென்னை: அமமுக-விலிருந்து விலகிய செந்தில் பாலாஜி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டதற்கு அதிமுக அமைச்சர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

தினகரனின் வலதுகரமாக செயல்பட்ட செந்தில் பாலாஜி இன்று தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் பிற்பகல்  12 மணிக்கு மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  திமுகவில் இணைந்தார். அப்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து அவர் கௌரவித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் சிறந்த தலைவராக ஸ்டாலினை பார்க்கிறேன். அவர் மேல் கொண்ட ஈர்ப்பால் திமுகவின் அடிப்படை உறுப்பினராக என்னை இணைத்துக்கொண்டேன்’ என்று கூறினார்.

செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்திருந்தற்கு அதிமுக அமைச்சர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். அந்த  வகையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி போனதும் அவருடன் சென்ற பலர், தற்போது அதிமுகவிலேயே மீண்டும் வந்து இணைந்து விட்டனர். பில்டப் மூலம் ஒருநாள் ஹீரோ ஆக செந்தில் பாலாஜி முயற்சிப்பதாக விமர்சித்துள்ளார்.

அமைச்சர் தங்கமணியோ, ‘அதிமுகவில் சேர முயற்சித்த செந்தில்பாலாஜி அதில் சேரமுடியாததால் திமுகவில் இணைந்துள்ளார். அவர் அங்கு உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும். செந்தில்பாலாஜி பல கட்சிகளுக்குத் தாவும் பச்சோந்தி,  பல வேஷம் போடும் வேடதாரி’ என்று சாடியுள்ளார்.

பதவிக்காகவே செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்துள்ளதாகப் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.