×

திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி: ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் வருகை?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இன்று இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இன்று இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமமுக மாநில அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர், கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக உள்ள முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி திமுகவில் இணையப்போவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. அவர் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் இன்று (டிச.14) காலை 11
 

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இன்று இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இன்று இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

அமமுக மாநில அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர், கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக உள்ள முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி திமுகவில் இணையப்போவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. அவர் தனது ஆதரவாளர்களுடன்  அண்ணா அறிவாலயத்தில் இன்று (டிச.14) காலை 11 மணிக்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கட்சியில் இணைய மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைவதற்காக  சென்னை அண்ணா அறிவாலயம் வரவுள்ளார். முன்னதாக அமமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் அண்ணா அறிவாலயம் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் டிடிவி ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட டிடிவி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரில் மிக முக்கியமானவராக அறியப்பட்டவர் செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தில் அசைக்க முடியாத சக்தியாக அதிமுகவை மாற்றியதில் கணிசமான பங்கு செந்தில் பாலாஜிக்கு உண்டு. 

டிடிவி தினகரன் – செந்தில் பாலாஜி இருவருக்குமிடையே மனக்கசப்பு இருந்து வந்த நிலையில்  அரவக்குறிச்சி – கரூர் தொகுதிகளில் மீண்டும் எழுச்சி பெற இந்த முறை செந்தில் பாலாஜி என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளது திமுக .இதையடுத்து செந்தில் பாலாஜியின் இணைப்பு கொங்கு மண்டலத்தில்  புதிய அத்தியாயத்திற்குத் தொடக்கமாக இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.