×

திமுகவின் கொள்கை பரபரப்பு செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம்!

திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகத் தங்க தமிழ்ச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகத் தங்க தமிழ்ச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவிலிருந்து பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய டிடிவி தினகரனுடன் ஆரம்ப முதலே இருந்து வந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் எவ்வளவு பெரிய இடர்பாடுகள் வந்தபோதும் தினகரனுடன் பயணித்து வந்தார். இதையடுத்து தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்
 

திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகத் தங்க தமிழ்ச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகத் தங்க தமிழ்ச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

அதிமுகவிலிருந்து  பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய டிடிவி  தினகரனுடன் ஆரம்ப முதலே இருந்து வந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன்  எவ்வளவு பெரிய இடர்பாடுகள்  வந்தபோதும் தினகரனுடன் பயணித்து வந்தார். இதையடுத்து  தங்க தமிழ்ச்செல்வன்  டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஜூன் மாதம்  அமமுகவிலிருந்து பிரிந்து தேனி மாவட்ட நிர்வாகிகள் பலருடன் திமுகவில் இணைந்தார். 

இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகச் செயல்படுவார் என தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி சிவா, ஆ.ராசாவுடன் இணைந்து தங்க தமிழ்ச்செல்வனும் கொள்கை பரப்புச் செயலாளராகச் செயல்படுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போல் அமமுகவிலிருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்த  வி.பி.கலைராஜனுக்கு திமுகவின் இலக்கிய அணி இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

முன்னதாக அமமுகவிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.