×

திமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார்?..29 ஆம் தேதி கூடுகிறது பொதுக்குழுக் கூட்டம்!

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் கடந்த 7 ஆம் தேதி காலமானார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் கடந்த 7 ஆம் தேதி காலமானார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்குப் பிறகு மு.க ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறவும், ஆலோசனை வழங்கவும் தூணாக இருந்த அன்பழகனின் மறைவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பெரும் வேதனைக்குள்ளாகியது. அவரது மறைவுக்குப் பின்னர், 7 வாரக்
 

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் கடந்த 7 ஆம் தேதி காலமானார்.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் கடந்த 7 ஆம் தேதி காலமானார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்குப் பிறகு மு.க ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறவும், ஆலோசனை வழங்கவும் தூணாக இருந்த அன்பழகனின் மறைவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பெரும் வேதனைக்குள்ளாகியது. அவரது மறைவுக்குப் பின்னர், 7 வாரக் காலம் துக்கம் அனுசரிக்கப்பட்டு அனைத்து கட்சி நிகழ்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன. 

அந்த 7 நாட்கள் நேற்றோடு முடிவடைந்த நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பது குறித்த, திமுக பொதுக்குழுக் கூட்டம் 29.3.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் எனது தலைமையில் நடைபெறும் அதன்போது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் திமுக பொதுச்செயலாளராக இருந்த திமுகவின் தூண் பேராசிரியர் க.அன்பழகன் இறைவனடி சேர்ந்ததால், அந்த பதவி தற்போது காலியாக இருக்கிறது. திமுகவின் அனைத்து அறிவிப்புகளும் பொதுச் செயலாளர் மூலமாகவே தெரியப்படுத்தப்படும் என்பதால், புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.