×

திமுக-வில் செந்தில் பாலாஜி..? பின்னணியில் திமுக முக்கியப்புள்ளி

செந்தில் பாலாஜி திமுகவில் இணைவதாக அறிவித்திருப்பதற்குப் பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: செந்தில் பாலாஜி திமுகவில் இணைவதாக அறிவித்திருப்பதற்குப் பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமமுக கட்சியின் மாநில அமைப்பு செயலாளராக இருந்த முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைய இருப்பதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு டிடிவி ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட
 

செந்தில் பாலாஜி திமுகவில் இணைவதாக அறிவித்திருப்பதற்குப் பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: செந்தில் பாலாஜி திமுகவில் இணைவதாக அறிவித்திருப்பதற்குப் பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமமுக கட்சியின் மாநில அமைப்பு செயலாளராக இருந்த முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைய இருப்பதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு டிடிவி ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட டிடிவி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரில் மிக முக்கியமானவராக அறியப்பட்டவர் செந்தில் பாலாஜி.

2011-2016 ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த இவர், டிடிவி – எடப்பாடி இடையே விரிசல் ஏற்பட்ட போது, டிடிவி ஆதரவாளராக உருவெடுத்துக் கொண்டார். அதன்பின் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் வாக்குகளை சிதறடித்ததில் செந்தில் பாலாஜியின் பங்கு முக்கியமானது. 

இப்படியாக, டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டு வந்த செந்தில் பாலாஜியை வளைத்துவிட வேண்டும் என திமுக தலைமை முடிவு செய்துள்ளது. பொருளாதார ரீதியிலும் திமுகவிற்கு செந்தில் பாலாஜி பக்கபலமாக இருப்பார் என்றும் திமுக தலைமை ஆலோசித்துள்ளது.

அதனையடுத்து, இந்த அசைன்மெண்ட் ஸ்டாலினின் வலதுகரமாக செயல்பட்டு வரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் தான் இந்த செய்திகள், பத்திரிகையாளர்களிடம் கசியத் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில், இந்த தகவல் குறித்து கேள்விப்பட்ட டிடிவி தினகரன் அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே தன் ஆதரவு முன்னாள் அமைச்சர் பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பனை தூது அனுப்பியுள்ளார் தினகரன். ஆனால், பழனியப்பனை தனது டெக்ஸ்டைல்ஸ், வீடு என மாறி மாறி அலைக்கழித்த செந்தில் பாலாஜி, இறுதியாக டெக்ஸ்டைல்ஸ் கடையில் வைத்து சந்தித்துள்ளார். அப்போது, “அண்ணன் உன்னிடம் பேச வேண்டுமாம்..” என பழனியப்பன் கூற, “இல்ல அண்ணன் இப்ப நான் பேசுறது சரியா இருக்காது” என மறுத்துள்ளார்.

இந்த தகவல் தினகரனுக்கு தெரிவிக்கப்பட்ட போதே, செந்தில் பாலாஜி மனதில் இருப்பதை தினகரன் தெரிந்து கொண்டாராம். இருப்பினும், தன் ஆதரவாளர்கள் தங்க.தமிழ்ச்செல்வன் போன்றவர்களை வைத்து தூது அனுப்பியிருக்கிறார். இதையெல்லாம், கடந்து செந்தில் பாலாஜியை திமுகவில் இணைக்கும் அசைன்மெண்ட்டை வெற்றிகரமாக முடித்திருக்கிறார் ஆ.ராசா என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.