×

திமுக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற முயல்கிறது: எடப்பாடி குற்றச்சாட்டு…

வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி சென்னையில் இருக்கும் அவரது வீட்டிற்கே சென்று நேற்று சந்தித்துப் பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கீழடியில் அருங்காட்சியகம் துவங்க பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். அதனையடுத்து, வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை வருமான வரித்துறை
 

வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி சென்னையில் இருக்கும் அவரது வீட்டிற்கே சென்று நேற்று சந்தித்துப் பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கீழடியில் அருங்காட்சியகம் துவங்க பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

அதனையடுத்து, வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது. அதே போல், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து திமுக  வெற்றி பெற முயல்கிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், திமுக தனது பண பலத்தால் வெற்றி பெற நினைக்கிறது, ஆனால் அதிமுக மக்களின் ஆதரவோடு வெற்றி பெரும் என்றும் கூறியுள்ளார்.