×

திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்… டைம்ஸ்நவ் சிவோட்டர்ஸ் கருத்துக் கணிப்பு முடிவு

டைம்ஸ் நவ் சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்புகளுக்கும் தேர்தல் இறுதி முடிவுக்கும், வேறுபாடு இருக்காது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய என இரு கருத்துக்கணிப்புகளையும் அந்நிறுவனங்கள் வெளியிடும். கிட்டத்தட்ட அவற்றின் கருத்துக்கணிப்பின்படியே ஆட்சி அமையும். அதன்படி தமிழக தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பை தற்போது டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ளது. கூட்டணிகள் அமைவதற்கு முன் ன் இந்த கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டிருப்பதால் முடிவில் சிறு மாற்றம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இருப்பினும், தேர்தலுக்குப் பின்னும் ஒரு கருத்துக்கணிப்பு வெளியிடப்படும். அதிலிருந்து முடிவுகளை நாம்
 

டைம்ஸ் நவ் சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்புகளுக்கும் தேர்தல் இறுதி முடிவுக்கும், வேறுபாடு இருக்காது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய என இரு கருத்துக்கணிப்புகளையும் அந்நிறுவனங்கள் வெளியிடும். கிட்டத்தட்ட அவற்றின் கருத்துக்கணிப்பின்படியே ஆட்சி அமையும். அதன்படி தமிழக தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பை தற்போது டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ளது. கூட்டணிகள் அமைவதற்கு முன் ன் இந்த கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டிருப்பதால் முடிவில் சிறு மாற்றம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இருப்பினும், தேர்தலுக்குப் பின்னும் ஒரு கருத்துக்கணிப்பு வெளியிடப்படும். அதிலிருந்து முடிவுகளை நாம் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.

தற்போதைய கருத்துக்கணிப்பின்படி, திமுக கூட்டணி 158, அதிமுக கூட்டணி 65, இடங்களை கைப்பற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் 5 இடங்களிலும் அமமுக 3 இடங்களிலும் இதர கட்சிகள் 3 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக டைம்ஸ்நவ்-சிவோட்டர்ஸ் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனைவைத்து பார்க்கும்போது “ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு” தான் போல…