×

திமுக கவுன்சிலர் கடத்தப்பட்டதாக வழக்கு : மகனுக்கு 15,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு

முதுகுளத்தூர் ஒன்றியத்தின் 8 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் சாத்தையா போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதுகுளத்தூர் ஒன்றியத்தின் 8 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் சாத்தையா போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முத்தையாவை காணவில்லை என்றும் அவரை அதிமுகவினர் தான் கடத்தியிருப்பர் என்றும் அவரது மகன் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் காணாமல் போனதாகக் கூறப்படும் சாத்தையாவை நீதிமன்றத்தில்
 

முதுகுளத்தூர் ஒன்றியத்தின் 8 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் சாத்தையா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முதுகுளத்தூர் ஒன்றியத்தின் 8 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் சாத்தையா போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முத்தையாவை காணவில்லை என்றும் அவரை அதிமுகவினர் தான் கடத்தியிருப்பர் என்றும் அவரது மகன் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் காணாமல் போனதாகக் கூறப்படும் சாத்தையாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்றும் அப்படி ஆஜர் படுத்தவில்லை என்றால்  ராமநாதபுரம் எஸ்.பி. நேரில் ஆஜராக வேண்டும் என்றும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டனர். 

அதன் படி, இன்று சாத்தையா காவல்துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதில் சாத்தையா, தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தன் மகனுடன் இருக்க பிடிக்காமல், மகளுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் கடுப்பான நீதிபதிகள்,  நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக சாத்தையா மகன் ராஜாவுக்கு ரூ.15,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.