×

திமுக எம்.எல்.ஏ மகன் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்!

அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுகவில் மூத்த நிர்வாகிகளுள் ஒருவரான டி.பி.எம்.மைதீன்கான், 2001 ஆம் ஆண்டு முதல் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது மகன் பெயர் காஜா பீர் முகமது(55). கடந்த சில காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை பெற்று அளிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நிலை மேலும் மோசமானதால், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,
 

அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுகவில் மூத்த நிர்வாகிகளுள் ஒருவரான டி.பி.எம்.மைதீன்கான், 2001 ஆம் ஆண்டு முதல் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது மகன் பெயர் காஜா பீர் முகமது(55). கடந்த சில காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை பெற்று அளிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நிலை மேலும் மோசமானதால், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல இவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவரது உயிரிழப்பு எம்.எல்.ஏ மைதீன்கான் மற்றும் அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.