×

தி.மு.க கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடக் கூடாது: உயர் நீதி மன்றம் உத்தரவு!

நீதி மன்ற ஆணைக்கு எதிராக போராட்டம் செய்வது குற்றமாகும் , தி.மு.க கூட்டணி கட்சிகள் இந்த போராட்டத்தை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளனர். கடந்த ஜூலை மாதம், சென்னையை விட 2 மடங்கு சொத்து வரியை கோவைக்கு உயர்த்தி கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. மற்ற மாவட்டங்களை விட கோவைக்கே அதிக சொத்து வரி விதிக்கப் பட்டது. இதனை எதிர்த்து தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளும் வரும் 27 ஆம் தேதி முழுக் கடையடைப்பு மற்றும்
 

நீதி மன்ற ஆணைக்கு எதிராக போராட்டம் செய்வது குற்றமாகும் , தி.மு.க கூட்டணி கட்சிகள் இந்த போராட்டத்தை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.  

கடந்த ஜூலை மாதம், சென்னையை விட 2 மடங்கு சொத்து வரியை கோவைக்கு உயர்த்தி கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. மற்ற மாவட்டங்களை விட கோவைக்கே அதிக சொத்து வரி விதிக்கப் பட்டது. இதனை எதிர்த்து தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளும் வரும் 27 ஆம் தேதி முழுக் கடையடைப்பு மற்றும் மறியல்  போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது. 

சட்டப்படி எந்த ஒத்துழைப்பும் இல்லாமல் இவ்வகையான போராட்டங்களை நிகழ்த்தக் கூடாது என்றும் இதற்கு தடை விதிக்கக் கோரியும் உயர் நீதி மன்றத்தில் தினேஷ் என்பவர் வழக்கு பதிவு செய்தார். 

அதனை இன்று விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள், சென்னை உயர்நீதி மன்றமும் மதுரை உயர் நீதி மன்றமும் ஒப்புதல் அளித்ததன் பிறகே இந்த சொத்து வரி உயர்வு கோவையில் அமலுக்கு வந்தது. அதனால், நீதி மன்ற ஆணைக்கு எதிராக போராட்டம் செய்வது குற்றமாகும் என்றும் தி.மு.க கூட்டணி கட்சிகள் இந்த போராட்டத்தை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.