×

தயங்கும் எடப்பாடி… தாவும் ஓ.பி.எஸ்… பாஜகவால் தறிகெட்டுப்போன தமிழக அரசியல்..!

பாஜகவுக்கு எதிரான எந்த கூட்டத்திலும் பங்கேற்க கூடாது என்ற முடிவில் எடப்பாடி பழனிசாமி இருப்பது தெளிவாக தெரிகிறது. 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்தது அனைத்து கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தின் உரிமை சார்ந்த விஷயங்களில் கூட பங்கேற்காமல் புறக்கணிப்பது நியாயமா..? ஒரு மாநிலத்தின் விவிஐபி இப்படி செய்யலாமா என்று கேள்வி கணைகள் எடப்பாடியாரை நோக்கி பாய்ந்து கொண்டே இருக்கிறது. நீட் விஷயத்திலும் துணை
 

பாஜகவுக்கு எதிரான எந்த கூட்டத்திலும் பங்கேற்க கூடாது என்ற முடிவில் எடப்பாடி பழனிசாமி இருப்பது தெளிவாக தெரிகிறது.

10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி  புறக்கணித்தது அனைத்து கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தின் உரிமை சார்ந்த விஷயங்களில் கூட பங்கேற்காமல் புறக்கணிப்பது நியாயமா..? ஒரு மாநிலத்தின் விவிஐபி இப்படி செய்யலாமா என்று கேள்வி கணைகள் எடப்பாடியாரை நோக்கி  பாய்ந்து கொண்டே இருக்கிறது. நீட் விஷயத்திலும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தான் பதில் கொடுத்தார். அடுத்து சி.வி.சண்முகம்  பதில் கொடுத்தார். ஆனால், வாய்ஸ்  கொடுக்க வேண்டியவர் ஏதோ சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சில வார்த்தைகளை உதிர்த்தார்.

இன்னமும் காவிரி விவகாரத்தில் கெஜட்டில் ஏற்றப்பட்ட விஷயத்தை சொல்கிறாரே தவிர, மற்ற விஷயங்களில் பதிலடி கொடுக்கவோ, மாநில அரசு சார்பில் உறுதி அளிக்கவோ தயக்கம் காட்டி வருகிறார் எடப்பாடி. இதனால் உரிய பதில் கொடுத்து ஓ.பன்னீர்செல்வம் ஸ்கோர் செய்து விடுகிறார். குறிப்பாக பாஜகவுக்கு எதிரான எந்த கூட்டத்திலும் பங்கேற்க கூடாது என்ற முடிவில் எடப்பாடி பழனிசாமி  இருப்பது தெளிவாக தெரிகிறது.