×

தமிழிசை ஆதரவாளர்களுக்கு இடமில்லையா? பிஜேபியில் புதுக் குழப்பம்!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருக்க என்னென்ன செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்துகொண்டு இருக்கிறது அதிமுக அரசு. அப்படியே நடந்தாலும் பிஜேப்பி உட்பட கூட்டணி காட்சிகள் எதற்கும் ஒரு மாநகராட்சி கூடக் கொடுக்கக் கூடாது,என்பதிலும் அதிமுக உஷாராக இருக்கிறது. .தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருக்க என்னென்ன செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்துகொண்டு இருக்கிறது அதிமுக அரசு. அப்படியே நடந்தாலும் பிஜேபி உட்பட கூட்டணி கட்சிகள் எதற்கும் ஒரு மாநகராட்சி கூடக் கொடுக்கக் கூடாது,என்பதிலும் அதிமுக உஷாராக
 

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருக்க என்னென்ன செய்ய முடியுமோ அவ்வளவையும்  செய்துகொண்டு இருக்கிறது அதிமுக அரசு.
அப்படியே நடந்தாலும் பிஜேப்பி உட்பட கூட்டணி காட்சிகள் எதற்கும் ஒரு மாநகராட்சி கூடக் கொடுக்கக் கூடாது,என்பதிலும் அதிமுக உஷாராக இருக்கிறது.

.தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருக்க என்னென்ன செய்ய முடியுமோ அவ்வளவையும்  செய்துகொண்டு இருக்கிறது அதிமுக அரசு.

அப்படியே நடந்தாலும் பிஜேபி உட்பட கூட்டணி கட்சிகள் எதற்கும் ஒரு மாநகராட்சி கூடக் கொடுக்கக் கூடாது,என்பதிலும் அதிமுக உஷாராக இருக்கிறது.

ஆனாலும் பிஜேபி மனம் கலங்காமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிக்குழுவை அறிவித்து இருக்கிறது.இந்தத் தேர்தல் பணிக்குழுவின் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சராக பொன்.ராதா கிருஷ்ணன் அறிவிக்கப் பட்டுள்ளார்.அவரோடு எல்.கணேசன், ஹெச். ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், கே.எஸ் நரேந்திரன், எஸ்.மோகன்ராஜுலு,கருப்பு முருகானந்தம்,வானதி சீனிவாசன், சுப.நாகராஜன்,நயினார் நாகேந்திரன் சிவகாமி பரமசிவம்,எஸ்.கே வேதரத்தினம்,ஏ.ஆர்.மகாலட்சுமி, எம்.வெங்கடேசன், முன்னாள் எம்.பி,எஸ்.எஸ் ராமதாஸ் என 15 உறுப்பினர்கள் அறிவுக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த பட்டியல்தான் தமிழ்நாடு பிஜேபியில் சலசலப்பைக் கிளப்பி இருக்கிறது.

தமிழ்நாடு பிஜேபியின் தலைவராக இருந்த தமிழிசையை தெலுங்கானா கவர்னராக ஆக்கியதுமே இங்கே இருக்கும் அவரது ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்படுவதாக புகார் எழுந்தது.இப்போது அறிவிக்கப் பட்டுள்ள இந்தத் தேர்தல் பணிக்குழு பட்டியல் அதை உறுதி செய்வதாக இருக்கிறது. இதில் தமிழிசை செளந்தரராஜன் ஆதரவாளர்கள் யாருமே இல்லை,இதற்கு முழுக்காரணம் பொன்னாரும் வானதி சீனிவாசனும்தான் என்று தமிழிசை ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள்.