×

தமிழகத்தில் எப்போதும் கழகங்களின் ஆட்சிதான்: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தை பொறுத்தவரை எப்போதும் கழகங்களின் ஆட்சிதான் மேலோங்கி இருக்கும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கோவை: தமிழகத்தை பொறுத்தவரை எப்போதும் கழகங்களின் ஆட்சிதான் மேலோங்கி இருக்கும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 5 மாநில தேர்தல் முடிவில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 5 மாநில தேர்தலில் பின்னடைவு முன்னடைவு என்ற பேச்சில்லை. வாக்குகளில் பெரிய வித்தியாசமில்லை. ஆயிரம் வாக்குகளில் கூட வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

தமிழகத்தை பொறுத்தவரை எப்போதும்  கழகங்களின் ஆட்சிதான் மேலோங்கி இருக்கும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

கோவை: தமிழகத்தை பொறுத்தவரை எப்போதும்  கழகங்களின் ஆட்சிதான் மேலோங்கி இருக்கும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 5 மாநில தேர்தல் முடிவில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 5 மாநில தேர்தலில் பின்னடைவு முன்னடைவு என்ற பேச்சில்லை. வாக்குகளில் பெரிய வித்தியாசமில்லை. ஆயிரம் வாக்குகளில் கூட வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலத்தின் பிரச்னை அடிப்படையில் தேர்தல் முடிவுகள் வந்திருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கழகங்களின் ஆட்சிதான் நடைபெறும். கர்நாடகா ஒவ்வொரு அணை கட்டும்போதும் நாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். கர்நாடகாவில் தொடர்ந்து அணைகள் கட்டுவதால் தமிழகம் பாலைவனமாக காட்சியளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசு காவிரி  தீர்ப்பை மதித்து நடப்பதில்லை.  கர்நாடக அரசு காவிரி தீர்ப்பை மதித்து நடந்துள்ளது என்ற வரலாறே கிடையாது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு தண்ணீர் வராது. தமிழகம் பாலைவனம் ஆகிவிடும். 

கஜா புயல் குறித்து ஏற்கெனவே தமிழக அரசு பிரதமரிடம் கடிதம் கொடுத்துள்ளது. மத்திய அரசு கூடுதல் விளக்கம் கேட்டிருந்தனர். அது இன்று அனுப்பபட்டுள்ளது. மேலும் 15,000 கோடி நிவாரணம் கேட்டுள்ளோம். மத்திய அரசு எவ்வளவு கொடுக்கின்றது என பார்க்கலாம்? என்றார்.