×

தமிழகத்தில் அதிகரித்த கள்ளச்சாராயம்! – அமைச்சர் கடும் எச்சரிக்கை

தமிழகத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், கள்ளச்சாராயம் காய்ச்சினால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், கள்ளச்சாராயம் காய்ச்சினால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்து வரும் கொரோனா பரிசோதனை மையத்தின் பணிகளை தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்
 

தமிழகத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், கள்ளச்சாராயம் காய்ச்சினால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், கள்ளச்சாராயம் காய்ச்சினால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்து வரும் கொரோனா பரிசோதனை மையத்தின் பணிகளை தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
“தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை தருமபுரியில் கொரோனா தொற்று பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை. அதே நேரத்தில், வெளிநாட்டிலிருந்து தருமபுரிக்கு வந்தவர்கள் எண்ணிக்கை 668 ஆக உள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இவர்களில் 497 பேர் 28 நாள் கண்காணிப்பு முடிந்து கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மீதமுள்ள 171 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களுக்கும் அறிகுறிகள் தென்படவில்லை.

இதுதவிர 9,865 பேர் வெளி மாவட்டங்களிலிருந்து தருமபுரிக்கு வந்துள்ளனர். இவர்களும் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை.
ஊரடங்கு காரணமாக தருமபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கள்ளச்சாராயம் குறித்த சோதனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதுவரை 44 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சினால் அவர்கள் மீது மிகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
கொரோனா காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒரு வாரத்துக்கு ஊரடங்கு என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கு ஏற்றார்போல குடிமகன்கள் மது பாட்டிலை வாங்கி வைத்துக்கொண்டனர். ஆனால், ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதால், குடிக்க வழியின்றி மக்கள் அல்லாடி வருகின்றனர். கொரோனாவுக்கு பலியானவர்களைக் காட்டிலும் மதுவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது. இந்த நிலையில் தமிழகம் முழுக்க கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.