×

தமிழகத்தின் பிக்பாஸ் அதிமுக தான் – அமைச்சர் கடம்பூர் ராஜூ

கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துரை அமைச்சர் கடம்பூர் ராஜு, “முதல்வர் வெளிநாட்டு பயணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொச்சைபடுத்தியுள்ளார். மருத்துவ சேவைக்காக மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்வர் கையெப்பமிட்டு தமிழகத்திற்கு பெருமை சேர்ந்துள்ளார். எம்.ஜீ .ஆருக்கு பின் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்ட ஒரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி. திமுக ஆட்சி காலத்தில் செய்ய தவறியதை இந்த அரசு செய்து கொண்டிருப்பதை பொறுக்கமால் கொச்சைபடுத்தி அரசியல் செய்வது எதிர் கட்சி தலைவருக்கு அழகல்ல. தமிழகத்தின் பிக்பாஸ் அதிமுக
 

கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துரை அமைச்சர் கடம்பூர் ராஜு, “முதல்வர் வெளிநாட்டு பயணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொச்சைபடுத்தியுள்ளார். மருத்துவ சேவைக்காக மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்வர் கையெப்பமிட்டு தமிழகத்திற்கு பெருமை  சேர்ந்துள்ளார். 

எம்.ஜீ .ஆருக்கு பின் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்ட ஒரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி. திமுக ஆட்சி காலத்தில் செய்ய தவறியதை இந்த அரசு செய்து கொண்டிருப்பதை பொறுக்கமால் கொச்சைபடுத்தி அரசியல் செய்வது எதிர் கட்சி தலைவருக்கு அழகல்ல. தமிழகத்தின் பிக்பாஸ் அதிமுக தான். 

1979 ஆம் ஆண்டு அத்திவரதர் வெளியே கொண்டு வந்து பூஜை செய்த போது  முதல்வராக இருந்தவர் எம்.ஜீ.ஆர் தான், 40 ஆண்டுகள் கழித்து அத்திவரதர் பூஜை தற்போது நடந்த போதும் அதிமுக ஆட்சி தான். அதனால் அதிமுகதான் தமிழகத்தின் பிக்பாஸ்” என்று கூறினார்.