×

டெல்லியில் இருந்து வரும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு கமலாலயத்தில் வரவேற்பு விழா!

மிழக பாரதிய ஜனதா தலைவராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவராக இருந்த எல்.முருகன் நியமிக்கபட்டார். தமிழக பாஜக கட்சியின் தலைவராகச் செயலாற்றி வந்த, தமிழிசை சௌந்தர ராஜனைக் கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக மத்திய அரசு நியமனம் செய்தது. அவருக்குப் பிறகு யார் அந்த பதவிக்கு வருவார்கள் என்று கடந்த 4 மாதத்திற்கு மேலாகக் குழப்பம் நிலவி வந்தது. இதனிடையே, யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து கருத்துக் கேட்கும்
 

மிழக பாரதிய ஜனதா தலைவராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவராக இருந்த எல்.முருகன் நியமிக்கபட்டார்.

தமிழக பாஜக கட்சியின் தலைவராகச் செயலாற்றி வந்த, தமிழிசை சௌந்தர ராஜனைக் கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக மத்திய அரசு நியமனம் செய்தது. அவருக்குப் பிறகு யார் அந்த பதவிக்கு வருவார்கள் என்று கடந்த 4 மாதத்திற்கு மேலாகக் குழப்பம் நிலவி வந்தது.

இதனிடையே, யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து கருத்துக் கேட்கும் கூட்டம் நடந்தது. அதன் முடிவில் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன், A.P. முருகானந்தம் உள்ளிட்ட நபர்களுள் ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் படலாம் என்று தெரிவிக்கபட்டது. ஆனால், புதிய திருப்பமாக தமிழக பாரதிய ஜனதா தலைவராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவராக இருந்த எல்.முருகன் நியமிக்கபட்டார்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் டெல்லியில் இருந்து தமிழகம் வரும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு சென்னை விமான நிலையத்திலும்,  பாஜக மாநில தலைமை அலுவலகம் கமலாலயத்திலும் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கபட உள்ளதாகவும், அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளிப்பார் என்றும் தெரிவிக்கபபட்டுள்ளது.