×

டி.டி.வி.தினகரன் ஆட்டம் ஆரம்பம்… அதிமுகவை அதிரவைக்கும் தரமான சம்பவம்..!

இந்த சம்பவத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள். #EcRegistersAmmk என்கிற ஹேஷ்டாக்கை உருவாக்கி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். அ.ம.மு.க. அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக அந்த கட்சியில் இருந்து விலகிய புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த
 

இந்த சம்பவத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள். #EcRegistersAmmk என்கிற ஹேஷ்டாக்கை உருவாக்கி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

அ.ம.மு.க. அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக அந்த கட்சியில் இருந்து விலகிய புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நிலையில் அ.ம.மு.க. அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.


 
இதுகுறித்து அவர், ‘மக்கள் பிரதிநிதி சட்டத்தின்படி கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி அ.ம.மு.க.வை பதிவு செய்வதற்காக நாங்கள் அனுப்பிய ஆவணத்தை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்துவிட்டு ஆட்சேபனை குறித்து தெரிவிப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்க அறிவுறுத்தியது. இதில் அ.தி.மு.க., இன்னொரு கட்சி மற்றும் சிலரும் ஆட்சேபனை தெரிவித்தார்கள்.

ஜெயலலிதா பெயரை பயன்படுத்தக்கூடாது என்று அ.தி.மு.க. தரப்பில் ஆட்சேபனை தெரிவித்தார்கள். ஆட்சேபனைகளுக்கு, நாங்கள் உரிய விளக்கத்தை கொடுத்தோம். இதனை ஏற்று தேர்தல் ஆணையம் அ.ம.மு.க.வை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்திருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ நகல் திங்கட்கிழமை கையில் கிடைக்கும்’’ என அவர் கூறினார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள்.  #EcRegistersAmmk என்கிற ஹேஷ்டாக்கை உருவாக்கி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.