×

டி.டி.வி அணிக்கு ஓ.பி.எஸால் செம அதிர்ஷம்… திடீர் மாற்றத்தால் அதிர்ச்சியில் எடப்பாடி ஆதரவாளர்கள்..!

டி.டி.வி.தினகரன் அணியிலிருந்து அதிமுகவுக்கு வந்தவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப் போவதாக கட்சி வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. துணை முதல்வர் ஓ.பி.எஸின் சொந்த மாவட்டமான தேனியில், இப்போதே உள்ளாட்சி தேர்தலில் யாரை நிறுத்துவது என்கிற பஞ்சாயத்து ஆரம்பித்து விட்டது. இங்கே இருக்கிற 4 எம்எல்ஏ தொகுதிகளில், 2 தொகுதி திமுக பக்கம் சென்று விட்டது. அதனால், இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் தகுதியான ஆளை நிறுத்த வேண்டும் என எடப்பாடி நினைக்கிறாராம். தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் தொகுதி எம்எல்ஏ
 

டி.டி.வி.தினகரன் அணியிலிருந்து அதிமுகவுக்கு வந்தவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப் போவதாக கட்சி வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

துணை முதல்வர் ஓ.பி.எஸின் சொந்த மாவட்டமான தேனியில், இப்போதே உள்ளாட்சி தேர்தலில் யாரை நிறுத்துவது என்கிற பஞ்சாயத்து ஆரம்பித்து விட்டது. இங்கே இருக்கிற 4 எம்எல்ஏ தொகுதிகளில், 2 தொகுதி  திமுக பக்கம் சென்று விட்டது. அதனால், இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் தகுதியான ஆளை நிறுத்த வேண்டும் என எடப்பாடி நினைக்கிறாராம்.

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையன். இவரது மகன் பாலா. 2 பேரும் முதல்வர் எடப்பாடியின் தீவிர ஆதரவாளர்கள். எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவுவிழாவில் முதல்வரை வாழ்த்தி பாலா வைத்த பேனரால் ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்புக்குள்ள நடந்த பேஸ்புக் யுத்தத்தை கடைசியில் முதல்வரே முடித்து வைத்தார் என்பது தனிக்கதை.

உள்ளாட்சித் தேர்தலில் தர்மயுத்தத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், டி.டி.வி.தினகரன் அணியிலிருந்து அதிமுகவுக்கு வந்தவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப் போவதாக கட்சி வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த இபிஎஸ் ஆதரவாளர்கள், உள்ளாட்சி தேர்தலில் நமக்கு வேண்டியவர்களை மட்டுமே   நிறுத்த வேண்டும் என அழுத்தம் கொடுக்கிறார்கள். 

அதனால், எம்எல்ஏ ஜக்கையன் மகன் பாலாவை கம்பம் நகராட்சி தலைவர் பதவிக்கு நிறுத்தச் சொல்கிறார்கள்.  ஆனால், இதில் ஓபிஎஸ் தரப்புக்கு திருப்தி இல்லை. இந்த பதவிக்கு ஜெயலலிதாவால் கட்சிப்பதவி பறிக்கப்பட்ட ஒருத்தரும், டிடிவி அணிக்குச்சென்று திரும்ப வந்த ஒருத்தரும் முயற்சி செய்கிறார்கள்.

 

இதற்கு ஓபிஎஸ் தரப்பு சம்மதம் சொன்னாலும் தரக்கூடாது என தேனி மாவட்ட இபிஎஸ் குரூப் கடுமையாக எதிர்க்கிறது. எம்பி சீட்தான் கையை விட்டுப்போச்சு. அதனால் இந்த முறை மகனுக்கு நகராட்சி தலைவர் பதவியை வாங்கிக் கொடுத்து விடவேண்டும் என கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் பிடிவாதமாக இருக்கிறார்.