×

டாஸ்மாக் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கு மு.க ஸ்டாலின் எதிர்ப்பு!

மதுவுக்கு பதில் ரசாயனம் குடித்து உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் குடிமகன்கள் தங்களை தயார் செய்துகொண்டனர். ஆனால், 24ம் தேதி இரவு பேசிய பிரதமர் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு என்று அறிவித்தார். அதன்பின் மே..3 வரை நீட்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மே.17 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் குடிமகன்கள் திக்குமுக்காடிப் போயியுள்ளனர்.
 

மதுவுக்கு பதில் ரசாயனம் குடித்து உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் குடிமகன்கள் தங்களை தயார் செய்துகொண்டனர். ஆனால், 24ம் தேதி இரவு பேசிய பிரதமர் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு என்று அறிவித்தார். அதன்பின் மே..3 வரை நீட்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மே.17 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் குடிமகன்கள் திக்குமுக்காடிப் போயியுள்ளனர். மது கிடைக்காததால் தற்கொலை, வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. மதுவுக்கு பதில் ரசாயனம் குடித்து உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

எப்போது தான் மாதுக்கடைகள் திறக்கப்படும் என்று குடிமகன்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கையில்,  மே 7ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மதுக்கடைகள் விற்பனைக்கு திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும் கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில்  திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், “இன்று அரசிடமிருந்து பேரிடர் பாதுகாப்புக்கான முக்கிய அறிவிப்பு வரும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வந்ததோ, #TASMAC மதுபானக் கடைகள் திறப்புக் குறித்த அறிவிப்பு! ஊரடங்கினால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பை சரிசெய்ய, மக்கள் மீது பழிபோடுவது நியாயமல்ல! ” என்று குறிப்பிட்டுள்ளார்.