×

ஜெயலலிதாவிற்கு இருந்த துணிச்சல் சிதம்பரத்திற்கு இல்லை – ஜெயக்குமார் சீண்டல்!

ஜெயலலிதா, அவர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஏற்பட்ட பிரச்னைகளை துணிச்சலுடன் எதிர் கொண்டார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா, அவர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஏற்பட்ட பிரச்னைகளை துணிச்சலுடன் எதிர் கொண்டார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “ப. சிதம்பரம் கைது நடவடிக்கையால் திமுக, துரைமுருகன் சந்தோஷத்தில் இருப்பதுபோன்று கருத்து தெரிவிக்கின்றனர். அவர்கள் சிதம்பரம் கைதை கண்டிக்கவில்லை. அவர் ஒரு வழக்கறிஞர், அவர் வழக்கை எதிர் கொள்வார் என்பதுபோல்
 

ஜெயலலிதா, அவர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஏற்பட்ட பிரச்னைகளை துணிச்சலுடன் எதிர் கொண்டார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா, அவர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஏற்பட்ட பிரச்னைகளை துணிச்சலுடன் எதிர் கொண்டார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “ப. சிதம்பரம் கைது நடவடிக்கையால் திமுக, துரைமுருகன் சந்தோஷத்தில் இருப்பதுபோன்று கருத்து தெரிவிக்கின்றனர். அவர்கள் சிதம்பரம் கைதை கண்டிக்கவில்லை. அவர் ஒரு வழக்கறிஞர், அவர் வழக்கை எதிர் கொள்வார் என்பதுபோல் தான் பேசினார் .

வழக்கின் காரணமாக தான் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதில் அரசியல் உள்நோக்கம் இல்லை. கைது நடவடிக்கையை சிதம்பரம் தவிர்த்துவிட்டு, சி.பி.ஐ, அமலாக்கத்துறையிடம் அவர் விளக்கம் அளித்திருக்கலாம். அதை அவர் செய்யவில்லை. திமுக ஜெயலலிதா மீது ஏற்படுத்திய அரசியல் காழ்ப்புணர்ச்சியை துணிச்சலுடன் அவர் எதிர் கொண்டார். ஆனால் ப.சிதம்பரம் வழக்கை எதிர் கொள்ளாமல் தலை மறைவாகிவிட்டார்” என்று கூறினார்.