×

ஜெயலலிதா மணிமண்டபத்துக்கு செலவழிக்கிற அரசு, கீழடியில் அருங்காட்சியகத்தையும் அமைக்கலாமே! … சீமான் வலியுறுத்தல்!

கீழடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில், மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட மொழி தமிழ் என்பதற்கான சான்றுகள் கிடைத்திருப்பது, உலகில் தமிழ் மொழிக்கான முக்கியமான அங்கீகாரமாக கருதப்படுகிறது. உலக நாடுகள் எல்லாம் கீழடியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆராய்ச்சியை முக்கியமாக கவனித்து வருகின்றன. கட்டடவியல், வானியல், கணிதம், நகர கட்டமைப்பு என்று மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கலைகளிலும், பண்பாட்டிலும், நாகரிகத்திலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் என்பது இந்த ஆய்வில் தெள்ளத்தெளிவாக புரிகிறது. கீழடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில், மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட மொழி
 

கீழடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில், மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட மொழி தமிழ் என்பதற்கான சான்றுகள் கிடைத்திருப்பது, உலகில் தமிழ் மொழிக்கான முக்கியமான அங்கீகாரமாக கருதப்படுகிறது. உலக நாடுகள் எல்லாம் கீழடியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆராய்ச்சியை முக்கியமாக கவனித்து வருகின்றன. கட்டடவியல், வானியல், கணிதம், நகர கட்டமைப்பு என்று மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கலைகளிலும், பண்பாட்டிலும், நாகரிகத்திலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் என்பது இந்த ஆய்வில் தெள்ளத்தெளிவாக புரிகிறது.

கீழடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில், மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட மொழி தமிழ் என்பதற்கான சான்றுகள் கிடைத்திருப்பது, உலகில் தமிழ் மொழிக்கான முக்கியமான அங்கீகாரமாக கருதப்படுகிறது. உலக நாடுகள் எல்லாம் கீழடியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆராய்ச்சியை முக்கியமாக கவனித்து வருகின்றன. கட்டடவியல், வானியல், கணிதம், நகர கட்டமைப்பு என்று மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கலைகளிலும், பண்பாட்டிலும், நாகரிகத்திலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் என்பது இந்த ஆய்வில் தெள்ளத்தெளிவாக புரிகிறது. இந்நிலையில், மத்திய அரசுக்காக காத்திருக்காமல், கீழடியில் கிடைத்திருக்கும் பொருட்களை வைத்து அருங்காட்சியகத்தை அமைக்க தமிழக அரசே முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழர்கள் நகரக் கட்டமைப்புடனும், நாகரிக வாழ்வியலுடன் வாழ்ந்ததை உலகிற்குப் பறைசாற்றும் கீழடி தொல்லியல் ஆய்விற்குரியப் பொருட்களை வைத்திடும் அருங்காட்சியகம் அமைத்திட மத்திய அரசை தமிழக அரசு எதிர்நோக்கியிருப்பது தேவையற்றதாகும். இது கீழடி ஆய்வு முடிவுகளை உலகிற்கு அறியத் தருவதில் மேலும் தாமதப்படுத்துமே ஒழிய, எந்தவொரு ஆக்கப்பூர்வப் பணிகளுக்கும் உதவாது என்பது வெளிப்படையானது.
கீழடி ஆய்விற்குத் தொடக்கம் முதலே முட்டுக்கட்டை போட்டு, முதல் இரண்டு ஆய்வுகளின் முடிவுகளை வெளியிடாமலும், ஆய்வுக்குரிய வசதிகளைச் செய்து தராமலும், சரிவர ஆய்வு செய்யும் அதிகாரிகளை இடமாற்றம் செய்துமென கீழடி ஆய்வு முடிவுகளை மூடி மறைக்கும் நயவஞ்சகச் செயலை செய்து வரும் மத்திய அரசு ஒருபோதும் கீழடி நாகரிகத்தை வெளிக்கொணர்ந்து உலகிற்குத் தமிழர்களின் தொன்மத்தை அறியத் தருவதை ஒருநாளும் விரும்பாது என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்தியப் பெருநிலத்தின் பூர்வக்குடிகள் தமிழெரென்பதும், இந்நாட்டின் தொன்ம வரலாறே தமிழர்களிடமிருந்து தான் தொடங்குகிறது என்பதும் கீழடி ஆய்வு முடிவுகள் நமக்குத் தெரிவிக்கும் செய்திகளாகும். இவ்வாய்வு முடிவுகள், தமிழர்களை இந்துக்கள் என அடையாளப்படுத்தி, இந்திய நாட்டை இந்துக்கள் நாடென நிறுவ முற்படும் சிந்தனையின் மீது ஆணி அடித்திருக்கிறது.

இந்திய வரலாற்றையே தலைகீழாகப் புரட்டிப் போட்டு அதனை மொத்தமாக மாற்றி எழுதக் கூடிய அழுத்தத்தை வரலாற்றிஞர்களுக்கு உருவாக்கும் கீழடி ஆய்வு முடிவுகள் என்பது தொல்லியல் துறையின் ஆய்வின் ஒரு மைல் கல்லாகும். 110 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட இடத்தில் கால்பங்கு கூட முழுமையாக ஆய்வு செய்யப்படாத நிலையில் அங்கு காணக் கிடைத்திருக்கும் பொருட்களும், அவைகள் தரும் செய்திகளுமே தமிழ்த் தேசிய இனத்தை புத்தெழுச்சி பெறச் செய்து அதன் வரலாற்றை மீள்கட்டமைப்பு செய்ய உதவுகின்றன. கீழடியின் 110 ஏக்கரும் முழுமையாகத் தொல்லியல் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகிற போது அது ஒட்டுமொத்த உலகையே தமிழர்கள் பக்கம் திருப்பும் வரலாற்றுப் பெருமிதத்தைத் தரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
அத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கீழடியில் கிடைத்திருக்கும் பொருட்களை ஆவணப்படுத்துவதற்காகத் தமிழக அரசே தனது பொருட்செலவில் அருங்காட்சியகம் அமைத்திடும் பணியைத் தொடங்க வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்புமாக இருக்கிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கும், அம்மையார் ஜெயலலிதாவின் மணிமண்டபம் கட்டுவதற்கும் தனது பொருட்செலவிலே ஏற்பாடுகளைச் செய்திட்டத் தமிழக அரசு, கீழடி ஆய்விற்கு மத்திய அரசை எதிர்பார்த்து நிற்பது விந்தையாக இருக்கிறது. தமிழ்த் தேசிய இனத்தின் நலனுக்கு எப்போதும் எதிர்நிலையில் இருக்கும் பாஜக அரசு, கீழடி எனும் தொன்மத் தமிழ் நாகரிகத்திற்கு உதவும் என்றெண்ணுவது தவறு.
எனவே, தமிழக அரசு உடனடியாகத் தனது நிதியினை ஒதுக்கீடு செய்து கீழடி ஆய்வுக்குரிய அருங்காட்சியகம் அமைத்திட வேண்டும் எனவும், கீழடி ஆய்வுபொருட்களை பெங்களூர்க்குக் கொண்டு செல்லாது தமிழகத்திலேயே வைத்து ஆவணப்படுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.