×

ஜனவரி 16 கட்டாயமில்லை… அமைச்சர் செங்கோட்டையன் பல்டி!

2020ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி பிரதமர் மோடி டெல்லி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதை தூர்தர்ஷன், வானொலி உள்பட அனைத்து அரசு ஊடகங்களிலும் நேரலை ஒளி, ஒலி பரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பார்க்க வசதி செய்ய வேண்டும், மாணவர்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
 
வருகிற ஜனவரி 16ம் தேதி விடுமுறை தினத்தன்று பிரதமர் உரையைக் கேட்க மாணவர்கள் கட்டாயம் வர வேண்டும் என்று கூறவில்லை என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

2020ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி பிரதமர் மோடி டெல்லி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதை தூர்தர்ஷன், வானொலி உள்பட அனைத்து அரசு ஊடகங்களிலும் நேரலை ஒளி, ஒலி பரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பார்க்க வசதி செய்ய வேண்டும், மாணவர்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால், பொங்களுக்கு அடுத்த தினம் விடுமுறை என்பதாலும் பலரும் ஊருக்கு செல்ல திட்டமிட்டிருப்பார்கள் என்பதாலும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

இந்தநிலையில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஒரு விளக்கம் அளித்துள்ளார்.  “ஜனவரி 16-ம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை. மாணவர்கள் வீட்டில் இருந்தே பிரதமரின் நிகழ்ச்சியை பார்க்கலாம். விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றே சுற்றறிக்கை வெளியிடப்பட்டது” என்று புது விளக்கம் அளித்தார். அமைச்சர் அறிவிப்பு வெறும் பேட்டியாக இருக்குமா, சுற்றறிக்கையாக அனுப்பப்படுமா என்று தெரியவில்லை.
ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு விலக்கு அளிக்கப்படும் என்று அமைச்சர் பேட்டியில் கூறினார். ஆனால், இந்த ஆண்டே அது நடைமுறைக்கு வந்துவிட்டது. அதேபோல், இதுவும் தற்போதைக்கு பிரச்னையை சமாளிக்க மேற்கொண்ட நடவடிக்கையா என்று கல்வியாளர்கள், பெற்றோர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.