×

சென்னை வருவது பிடிக்கும்; உற்சாக வரவேற்புக்கு நன்றி: மோடி பேச்சு!

ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்துள்ள மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை : ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்துள்ள மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி சென்னை ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்துள்ளார். அதனால் விமான நிலையத்தில் அவருக்கு பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பொன் ராதாகிருஷ்ணன், சி.பி ராதாகிருஷ்ணன், எச்.ராஜா மற்றும் அதிமுக அமைச்சர்கள் என பலர் நேரில் வருகை புரிந்து மோடியை வரவேற்றனர்.
 

ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்துள்ள மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

சென்னை : ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்துள்ள மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பிரதமர் மோடி சென்னை ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்துள்ளார். அதனால் விமான நிலையத்தில் அவருக்கு பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பொன் ராதாகிருஷ்ணன், சி.பி ராதாகிருஷ்ணன், எச்.ராஜா  மற்றும் அதிமுக அமைச்சர்கள் என பலர் நேரில் வருகை புரிந்து மோடியை வரவேற்றனர். 

அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர்,  ‘எனக்கு சென்னைக்கு வருவது மிகவும் பிடிக்கும். என்னை உற்சாகமாக வரவேற்ற உங்களுக்கு நன்றி. நான் அமெரிக்கா சென்று வந்தேன். அங்கு தமிழ் மொழியின் சிறப்பு குறித்து பேசினேன். அது தான் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் நம் நாட்டின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. மக்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டையே நிறுத்த வேண்டும் என்று சொல்லவில்லை, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைத்தான் தூக்கி எறிய வேண்டும். அதனால் சங்கடங்கள் ஏற்படுகிறது’ என்றார்.

தொடர்ந்து பேசிய மோடி, ‘காந்திஜியின் 150 வது பிறந்த நாளை ஒட்டி பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறோம்.  அதில் நமது கொள்கைகளைத் தொண்டர்கள் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.