×

செந்தில் பாலாஜி திமுகவில் இணையமாட்டார்: தங்க தமிழ்ச்செல்வன்

செந்தில் பாலாஜி திமுகவில் இணையமாட்டார் என தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். சென்னை: செந்தில் பாலாஜி திமுகவில் இணையமாட்டார் என தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். ஆனால் தினகரனுடன் செயல்படுவதால் இனி தனக்கு எந்த லாபமுமில்லை என செந்தில் பாலாஜி நினைப்பதாகவும் எனவே அவர் திமுகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசாவுடன் அவர்
 

செந்தில் பாலாஜி திமுகவில் இணையமாட்டார் என தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

சென்னை: செந்தில் பாலாஜி திமுகவில் இணையமாட்டார் என தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். ஆனால் தினகரனுடன் செயல்படுவதால் இனி தனக்கு எந்த லாபமுமில்லை என செந்தில் பாலாஜி நினைப்பதாகவும் எனவே அவர் திமுகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசாவுடன் அவர் இருப்பது போன்ற புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் செந்தில் பாலாஜி குறித்து கூறுகையில், முன்னாள் அமைச்சர் செந்தில்  பாலாஜி திமுக-வில் இணைய உள்ளதாக தவறான தகவல்கள் பரவி வருகின்றன. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரின் வேட்புமனுவை நிராகரிக்க  தமிழக அரசு முயற்சி செய்கிறது என்றார்.