×

சுங்க கட்டணம் உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும்! – ராமதாஸ் எச்சரிக்கை

சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியதுடன் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் என்று டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கைவிடுத்துள்ளார். சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியதுடன் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் என்று டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கைவிடுத்துள்ளார். கொரோனா காரணமாக மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், டோல் கட்டணம் வசூலிக்க
 

சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியதுடன் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் என்று டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியதுடன் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் என்று டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

கொரோனா காரணமாக மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், டோல் கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவரும் சரக்கு லாரி போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக ஏற்கனவே விலைவாசி உயர்ந்துள்ளது, தொழில்கள் முடக்கப்பட்டதால் மக்கள் அன்றாட வாழ்க்கையே சிரமமாக உள்ளது. இந்த நிலையில் டோல் கட்டணம் உயர்வு மக்களை மேலும் வாட்டும் என்று கூறப்படுகிறது.

 

 

இது குறித்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “கொரோனா வைரஸ் பரவல் அச்சமும், ஊரடங்கும் அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ள நிலையில், தமிழகத்தின் 23 சுங்கச்சாவடிகளில் சாலைக்கட்டணம் ரூ.30 வரை உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும்!” என்று கூறியுள்ளார்.