×

சீலை உடைத்து சோதனையில் குதித்த போலீஸ்! – சிக்குகிறாரா செந்தில் பாலாஜி?

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரன் ஆதரவாளராக இருந்தார். பின்னர் தி.மு.க-வில் இணைந்தார். அவருக்கு கரூர் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரன் ஆதரவாளராக இருந்தார். பின்னர் தி.மு.க-வில் இணைந்தார். அவருக்கு கரூர் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துத்
 

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரன் ஆதரவாளராக இருந்தார். பின்னர் தி.மு.க-வில் இணைந்தார். அவருக்கு கரூர் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரன் ஆதரவாளராக இருந்தார். பின்னர் தி.மு.க-வில் இணைந்தார். அவருக்கு கரூர் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துத் துறையில் வேலை தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அ.தி.மு.க-வில் இருந்தபோது அந்த வழக்கை பெரிதாக எடுத்துக்கொள்ளாத போலீசார், தி.மு.க-வுக்கு வந்த பிறகு தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தனர்.

செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியதாக கூறப்பட்டது. இதனால், செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடினார். மேலும் மந்தைவெளியில் உள்ள வீட்டை சோதனை செய்யக் கூடாது என்றும் கோரியிருந்தார். இந்த நிலையில், சென்னை மந்தைவெளியில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டில் இன்று போலீசார் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் சோதனையின்போது மந்தைவெளி வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த சீலை உடைத்து மீண்டும் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் சோதனை நடத்த நீதிமன்றத்தில் தடை கேட்டதன் மூலம் அங்கு முக்கிய ஆவணங்கள் மறைத்த வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.