×

சீனாவில் இருந்து முதல் ரேப்பிட் டெஸ்டிங் கிட் ஏப்ரல் 15ம் தேதிதான் வரும்! – ஐ.சி.எம்.ஆர் தகவல்

இந்தியாவுக்கு கொரோனாவை கண்டறியும் ரேப்பிட் டெஸ்டிங் கிட் வந்துகொண்டே இருக்கிறது, வந்துவிட்டது என்று அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் கூறிக்கொண்டே வந்தனர். எச்.ராஜா சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட பதிவில் இந்திய அரசு பல லட்சம் ரேப்பிட் டெஸ்டிங் கிட் வாங்கியுள்ளது என்றும், அதில் ஒரு லட்சம் தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். கொரோனா நோயை விரைவாக கண்டறிய உதவும் ரேப்பிட் டெஸ்டிங் கிட் வருகிற 15ம் தேதிதான் இந்தியாவுக்கு வரும் என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு கொரோனாவை கண்டறியும்
 
இந்தியாவுக்கு கொரோனாவை கண்டறியும் ரேப்பிட் டெஸ்டிங் கிட் வந்துகொண்டே இருக்கிறது, வந்துவிட்டது என்று அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் கூறிக்கொண்டே வந்தனர். எச்.ராஜா சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட பதிவில் இந்திய அரசு பல லட்சம் ரேப்பிட் டெஸ்டிங் கிட் வாங்கியுள்ளது என்றும், அதில் ஒரு லட்சம் தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கொரோனா நோயை விரைவாக கண்டறிய உதவும் ரேப்பிட் டெஸ்டிங் கிட் வருகிற 15ம் தேதிதான் இந்தியாவுக்கு வரும் என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு கொரோனாவை கண்டறியும் ரேப்பிட் டெஸ்டிங் கிட் வந்துகொண்டே இருக்கிறது, வந்துவிட்டது என்று அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் கூறிக்கொண்டே வந்தனர். எச்.ராஜா சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட பதிவில் இந்திய அரசு பல லட்சம் ரேப்பிட் டெஸ்டிங் கிட் வாங்கியுள்ளது என்றும், அதில் ஒரு லட்சம் தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதே போல் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரேப்பிட் டெஸ்டிங் கிட் வாங்க ஆர்டர் செய்துவிட்டோம், நாளை வந்துவிடும், இன்று வந்துவிடும் என்று கூறிக்கொண்டே இருந்தனர்.
இந்த நிலையில் சீனாவிடமிருந்து இந்தியா வாங்கியுள்ள ரேப்பிட் டெஸ்டிங் கிட் அடங்கிய சரக்கு பெட்டகம் ஏப்ரல் 15ம் தேதிதான் இந்தியாவுக்கே வர உள்ளது என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

இது குறித்து டெல்லியில் பேட்டி அளித்த அந்த அமைப்பின் தொற்று நோய் பிரிவு தலைவர் டாக்டர் ராமன் ஆர்.கங்கோத்கர், “முதல் பெட்டகம் ஏப்ரல் 15ம் தேதி வருகிறது. ஆனாலும் கவலைப்படத் தேவையில்லை, கொரோனாவைக் கண்டறிய தேவையான கருவிகள் நம்மிடம் உள்ளன. நேற்று வரை 2 லட்சத்து 6212 டெஸ்ட்கள் செய்யப்பட்டுள்ளன. நம்மிடம் இருக்கும் கருவிகளைக் கொண்டு அடுத்த ஆறு வாரங்களுக்கு நோய்த் தொற்றைக் கண்டறிய முடியும்” என்றார்.