×

சரித்திர விபத்தால் முதல்வரானவருக்கு ப.சிதம்பரத்தை பற்றி பேச தகுதியில்லை: கார்த்தி சிதம்பரம்

சரித்திர விபத்தால் முதல்வரானவருக்கு ப.சிதம்பரத்தை பற்றி பேச தகுதியில்லை: கார்த்தி சிதம்பரம் ப.சிதம்பரம் குறித்த முதலமைச்சரின் கருத்து அரசியல் நாகரீகமற்றது என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். காஷ்மீரை போல மத்திய அரசு நாளை தமிழகத்தை யூனியன் பிரதேசமாக ஆக்கினால் அதிமுக தலை வணங்கி நிற்கும் என ப.சிதம்பரம் கூறியிருந்தார். இந்நிலையில் மேட்டூரில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, “ப.சிதம்பரம் எத்தனை ஆண்டு காலம் மத்திய அமைச்சராக இருந்தார். அவரால் நாட்டுக்கு என்ன பயன். அவர்
 

சரித்திர விபத்தால் முதல்வரானவருக்கு ப.சிதம்பரத்தை பற்றி பேச தகுதியில்லை: கார்த்தி சிதம்பரம்

ப.சிதம்பரம் குறித்த முதலமைச்சரின் கருத்து அரசியல் நாகரீகமற்றது என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காஷ்மீரை போல மத்திய அரசு நாளை தமிழகத்தை யூனியன் பிரதேசமாக ஆக்கினால் அதிமுக தலை வணங்கி நிற்கும் என ப.சிதம்பரம் கூறியிருந்தார். இந்நிலையில் மேட்டூரில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, “ப.சிதம்பரம் எத்தனை ஆண்டு காலம் மத்திய அமைச்சராக இருந்தார். அவரால் நாட்டுக்கு என்ன பயன். அவர் பூமிக்குத்தான் பாரம்” என விமர்சித்திருந்தார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரத்தின் மகனும், எம்.பியுமான கார்த்தி சிதம்பரம், “பாரதீய ஜனதா கட்சி மெஜார்ட்டி இருப்பதால் சட்டத்தை நிறைவேற்றி வருகிறார். யூனியன் பிரச்சினை கோரிக்கை வைப்பது முழு மாநிலமாக மாற வேண்டும் காஷ்மீர் பிரச்சினை பொறுத்தவரை டிகிரேட் பண்ணிவிட்டார்கள். சர்வதிகார ஆட்சிதான் தற்போது நடக்கிறது. இந்தியாவின் நிதியமைச்சராக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் ப.சிதம்பரம். ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர் என்று விருது வாங்கியவர். அவரை முதலமைச்சர் இப்படி அநாகரிகமாக பேசும் பழனிசாமியின் மனசாட்சி உறுத்தவில்லையா? சரித்திர விபத்தால் முதல்வர் ஆனவர் இப்படி பேசலாமா, இப்படி பேச தகுதி இல்லை.

காஷ்மீரின் சரித்திரத்தை புரிந்துகொள்ளாமல், அங்குள்ள மக்களின் நிலைமையை புரிந்துகொள்ளாமல் ரஜினி ஆதரவு தெரிவித்தது வருத்தமளிக்கிறது, காஷ்மீர் சரித்திரத்தை படிக்கவேண்டும் என ரஜினி கருத்துசொல்லட்டும், மேலும் இதேபோன்று நீட், நெக்ஸ் போன்ற அனைத்து பிரச்னைகளிலும் ரஜினி கருத்து சொல்லட்டும்” என்று கூறினார்.