×

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி பட விஷயத்தை கேட்டால் விஜய்- அஜித் ரசிகர்கள் பொசிங்கிடுவாங்க.!

பல கோடி ரூபாய் செலவில் உருவாக இருக்கும் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள், வருகிற டிசம்பர் மாதம் தேனியை ஒட்டிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது. லெஜெண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர்களில் ஒருவரான சரவணன் அருள், ஜேடி- ஜெர்ரி இயக்கும் படத்தில் நாயகனாக அறிமுகமாக இருக்கும் திரைப்படத்தை எதிர்நோக்கி ஒட்டுமொத்த திரையுலகமும் காத்து கொண்டிருக்கிறது. பல்வேறு விதமான கேலி கிண்டல்களை மீறியும், தன்னம்பிக்கையுடன் தனது கடையின் விளம்பர படங்களில் நடித்து தமிழக அளவில் பிரபலமானவர் சரவணன் அருள். இப்படி விளம்பரங்களில்
 

பல கோடி ரூபாய் செலவில் உருவாக இருக்கும் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள், வருகிற டிசம்பர் மாதம் தேனியை ஒட்டிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது.

லெஜெண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர்களில் ஒருவரான சரவணன் அருள், ஜேடி- ஜெர்ரி இயக்கும் படத்தில் நாயகனாக அறிமுகமாக இருக்கும் திரைப்படத்தை எதிர்நோக்கி ஒட்டுமொத்த திரையுலகமும் காத்து கொண்டிருக்கிறது.

பல்வேறு விதமான கேலி கிண்டல்களை மீறியும், தன்னம்பிக்கையுடன் தனது கடையின் விளம்பர படங்களில் நடித்து தமிழக அளவில் பிரபலமானவர் சரவணன் அருள்.

இப்படி விளம்பரங்களில் நடித்து வந்தவருக்கு மேலும் ஊக்கம் அளித்து நாயகனாக்கி இருக்கின்றனர், இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி. பல கோடி ரூபாய் செலவில் உருவாக இருக்கும் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள், வருகிற டிசம்பர் மாதம் தேனியை ஒட்டிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது.

படப்பிடிப்பின் ஆரம்பமே பாடல் காட்சி ஒன்று படமாக இருக்கிறதாம். குறிப்பிட்ட பாடல் மாஸ் ஹீரோக்களுக்கு இணையான பில்டப்புடன், ஒட்டுமொத்த கிராமமும் கொண்டாட, நாயகன் சரவணனை அறிமுகம் செய்யும் விதத்தில் அமைய இருக்கிறதாம்.

இதற்காக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள், அண்ணாச்சியின் பெயர் பெருமைகள் பாடல் முழுவதும் ஒலிக்கும் விதத்தில், தீவிரமாக இசையமைத்து வருகிற தகவலும் தற்பொழுது வெளியாகியுள்ளது.