×

சட்டமன்றத்தேர்தல்… அதிமுக வாரி இரைக்கும் ரூ.40,000 கோடி..!

அதேநேரத்தில் திமுகவும் இந்த முறை ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அவாவில் உள்ளது. வருகின்ற தேர்தல் தான் நமக்கு கிளைமாக்ஸ். 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் களத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இப்போதே பணிகளை முடுக்கி விட்டுள்ளது அதிமுக. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வரவில்லை. அதிகாரமும், பணபலமும் அனைத்தும் மக்களிடம் எடுபடவில்லை என்பதை அறிந்து கொண்ட ஆளும் கட்சி மேலிடம் இந்த கடைசி ஆண்டிலாவது
 

அதேநேரத்தில் திமுகவும் இந்த முறை ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அவாவில் உள்ளது. வருகின்ற தேர்தல் தான் நமக்கு கிளைமாக்ஸ்.

2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் களத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இப்போதே பணிகளை முடுக்கி விட்டுள்ளது அதிமுக. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வரவில்லை. அதிகாரமும், பணபலமும் அனைத்தும் மக்களிடம் எடுபடவில்லை என்பதை அறிந்து கொண்ட ஆளும் கட்சி மேலிடம் இந்த கடைசி ஆண்டிலாவது அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன் முதல் கட்டமாக 40,000 கோடி ரூபாய் திட்டத்திற்கு தனியார் நிறுவனம் மூலம் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு பிள்ளையார் சுழியை ஆரம்பித்திருக்கிறது. அடுத்த சில மாதங்களில் மக்களை கவரும் பல அறிவிப்புகள் தொடர்ந்து வரும் என கூறப்படுகிறது. தேர்தல் வாக்குறுதிகளும் அனல் பறக்கும் என்று கூறப்படுகிறது.

அதேநேரத்தில் திமுகவும் இந்த முறை ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அவாவில் உள்ளது. வருகின்ற தேர்தல் தான் நமக்கு கிளைமாக்ஸ். அதில் நாம் வெல்வோம் என்று கூறி தனது உடன்பிறப்புகளுக்கு உறச்சகம் தந்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். திமுக தரப்பும் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கிவிட்டது.