×

சசிகலாவின் பினாமி சொத்து ரூ.5000 ஆயிரம் கோடி… 4 பெண்களுக்குள் நடக்கும் ரகசியம்..!

சசிகலா உள்பட நான்கு பெண்களுக்கு மட்டுமே நன்றாக தெரிந்த ரகசியம். இவர்கள் அனைவரும் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் என்பதால் அவ்வளவு சீக்கிரம் வெளியில் தகவல் வராது. 1600 ஆயிரம் கோடி ரூபாயை கொண்டு பண மதிப்பிழப்பின்போது சொத்து வாங்கி குவித்ததாக உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் பினாமி நபர்கள் மூலம் அதை விட ஐம்பது மடங்கு சொத்துக்கள் அதே வீட்டில் வைத்து பத்திரமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் எல்லாம் சசிகலாவின் விசுவாசிகள் மற்றும்
 

சசிகலா உள்பட நான்கு பெண்களுக்கு மட்டுமே நன்றாக தெரிந்த ரகசியம். இவர்கள் அனைவரும் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் என்பதால் அவ்வளவு சீக்கிரம் வெளியில் தகவல் வராது.

1600 ஆயிரம் கோடி ரூபாயை கொண்டு பண மதிப்பிழப்பின்போது சொத்து வாங்கி குவித்ததாக உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் பினாமி நபர்கள் மூலம் அதை விட ஐம்பது மடங்கு சொத்துக்கள் அதே வீட்டில் வைத்து பத்திரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

அவர்கள் எல்லாம் சசிகலாவின் விசுவாசிகள் மற்றும் உறவினர்கள். இப்போதைக்கு பிரச்னைக்குரிய நபர் சசிகலா என்பதால் அவரை பற்றிய அறிக்கை மட்டும் வந்துள்ளது. மற்றவர்களின் நெட்வொர்க்கை பார்த்தால் தான் எந்த உறவினர்கள் எந்த கம்பெனியை வாங்கி உள்ளார்கள், எத்தனை ஏக்கர் நிலம் வாங்கி உள்ளார்கள் என்ற விவரம் தெரியவரும்.

இந்த விஷயத்தில் யார் பினாமிகள்? யார் பெயரில் எந்த எஸ்டேட் இருக்கிறது. யார் பெயரில் ஷேர் மார்க்கெட்டில் கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது போன்ற அனைத்து விவரங்களும் தெரிந்தவர்கள் சசிகலா உள்பட நான்கு பெண்களுக்கு மட்டுமே நன்றாக தெரிந்த ரகசியம். இவர்கள் அனைவரும் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் என்பதால் அவ்வளவு சீக்கிரம் வெளியில் தகவல் வராது.

எனினும் அவர்களது அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டே வருகிறது. விரைவில் அவர்களும் வருமானவரித்துறை பிடியில் சிக்குவார்கள் என்றே அங்கிருந்து கசியும் தகவல்கள் சொல்கின்றன. இந்த 1600 கோடி போனாலும் சசிகலாவுக்கு வருத்தம் இல்லையாம். காரணம் பினாமி பெயர்களில் இதைவிட பல மடங்கு இருக்கிறதாம். அத்துடன் இன்றைய மார்க்கெட் மதிப்பில் சொத்துகள் 5000 ஆயிரம் கோடியை தாண்டுமாம்.