×

சசிகலா போட்ட கட்டளை… எடப்பாடி நிம்மதி… பொங்கியெழும் டி.டி.வி.தினகரன்..!

யாரையும் நேரடியாக சுட்டிகாட்டி விரோதத்தை சம்பாதித்து நீயும் சிறைக்கு சென்றுவிடாதே என்று டி.டி.வி.தினகரனுக்கு தனக்கு வேண்டியவர்கள் மூலம் தகவல் அனுப்பி இருப்பதாக சொல்கிறார்கள். ஜெயிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஆனால் இரண்டாம் இடத்தை கண்டிப்பாக பிடித்தே தீர வேண்டும் என்று சசிகலா தனக்கு வேண்டியவர்கள் மூலம் டி.டி.வி.தினகரன் தரப்புக்கு தகவல் சொல்லி அனுப்பி இருக்கிறார் என்ற ஒரு தகவல் றெக்கை கட்டி பறக்கிறது. அதே சமயம் இடைத்தேர்தலில் அதிமுக ஜெயிக்கட்டும் நான் வெளியே வந்ததும் ஆட்சியை நம்
 

யாரையும் நேரடியாக சுட்டிகாட்டி விரோதத்தை சம்பாதித்து நீயும் சிறைக்கு சென்றுவிடாதே என்று டி.டி.வி.தினகரனுக்கு தனக்கு வேண்டியவர்கள் மூலம் தகவல் அனுப்பி இருப்பதாக சொல்கிறார்கள்.

ஜெயிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஆனால் இரண்டாம் இடத்தை கண்டிப்பாக பிடித்தே தீர வேண்டும் என்று சசிகலா தனக்கு வேண்டியவர்கள் மூலம் டி.டி.வி.தினகரன் தரப்புக்கு தகவல் சொல்லி அனுப்பி இருக்கிறார் என்ற ஒரு தகவல் றெக்கை கட்டி பறக்கிறது.

 அதே சமயம் இடைத்தேர்தலில் அதிமுக ஜெயிக்கட்டும் நான் வெளியே வந்ததும் ஆட்சியை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வர அந்த இரண்டு இடங்களும் உதவும். எனவே, தினகரன் சும்மா இருக்கச் சொல்லுங்கள். நாம் போட்டியிட்டால் இப்போது நம் மீது நட்பில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் கூட மனது மாறும் வாய்ப்பு இருக்கிறது. சீனியர் தலைவர்கள் பலரும் இன்னும் நம்மை நம்பித் தான் அமைதி காத்து வருகிறார்கள்.

 அதை டி.டி.வி.தினகரன் கெடுத்துவிட வேண்டாம். எல்லாவற்றையும் நான் வெளியே வந்த பிறகு பார்த்து கொள்கிறேன். இடைத்தேர்தலில் போட்டி என்று ஆளுங்கட்சிக்கு இடைஞ்சல் கொடுக்க வேண்டாம். இதுவரை ஆளுங்கட்சி டி.டி.வி.தினகரனுக்கு தான் இடைஞ்சலாக இருக்கிறதே தவிர, நம் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 ஏதோ நிர்பந்தத்தின் பெயரில் தற்போது ஆட்சி செயல்படுகிறது. அதை அப்படியே விடுங்கள். நான் வெளியே வந்ததும் என் மீதுள்ள விசுவாசம், பாசம் காரணமாக என்னிடமே வந்துவிடுவார்கள். அதுவரை மத்திய அரசு மீதும் மற்றவர்களை பற்றியும் எதை வேண்டுமானாலும் பேசிவிட்டுபோ… ஆளுங்கட்சி மீது பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகளை வை. ஆனால் யாரையும் நேரடியாக சுட்டிகாட்டி விரோதத்தை சம்பாதித்து நீயும் சிறைக்கு சென்றுவிடாதே என்று டி.டி.வி.தினகரனுக்கு தனக்கு வேண்டியவர்கள் மூலம் தகவல் அனுப்பி இருப்பதாக சொல்கிறார்கள். இதனால், இடைத்தேர்தலில் டி.டி..வி., அணி நிற்பது சந்தேகம் என்கிறார்கள் அவரது அடிப்பொடிகள்.