×

சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் கொடுத்த டிஎஸ்பி மீது நடவடிக்கை கோரி மனு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையான நிலையில் சமீபத்தில் அவர் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார். அப்போது அவருக்கு தமிழக எல்லையிலும் தமிழகம் முழுவதிலும் சென்னையிலும் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்துவது குறித்து கிருஷ்ணகிரி டிஎஸ்பி சசிகலாவுக்கு நோட்டீஸ் கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையான நிலையில் சமீபத்தில் அவர் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார்.

அப்போது அவருக்கு தமிழக எல்லையிலும் தமிழகம் முழுவதிலும் சென்னையிலும் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்துவது குறித்து கிருஷ்ணகிரி டிஎஸ்பி சசிகலாவுக்கு நோட்டீஸ் கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் கொடுத்த கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன் தாக்கல் செய்த இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 27 ஆம் தேதி விடுதலையானார். கடந்த 9 ஆம் தேதி அவர் பெங்களூருவிலிருந்து தமிழகம் வந்தடைந்தார். அவருக்கு அமமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் வழியெங்கிலும் பூ தூவி, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.