×

குஷ்புவுடன் மோதும் உதயநிதி ஸ்டாலின்!!

கருணாநிதி மறைவுக்கு பிறகு அரசியலில் தீவிரம் காட்டிவருகிறார். வரும் உதயநிதி ஸ்டாலின், திமுகவின் இளைஞரணி செயலாளராக உள்ளார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, களப்பணி என அரசியல் களத்தில் இறங்கி பணி செய்து வருகிறார் உதயநிதி. தற்போது அவரை எம்எல்ஏவாக்க திட்டமிட்டுள்ள ஸ்டாலின் அவரை பல்வேறு இடங்களுக்கு பரப்புரைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே கட்சிக்குள் உதயநிதி தலையீடு அதிகமாக உள்ளதாக எம்எல்ஏ குக செல்வம் கட்சியிலிருந்து வெளியேறினார். இதனிடையே ஜெ. அன்பழகன் மறைவால் காலியாக உள்ள சேப்பாக்கம் தொகுதியில்
 

கருணாநிதி மறைவுக்கு பிறகு அரசியலில் தீவிரம் காட்டிவருகிறார். வரும் உதயநிதி ஸ்டாலின், திமுகவின் இளைஞரணி செயலாளராக உள்ளார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, களப்பணி என அரசியல் களத்தில் இறங்கி பணி செய்து வருகிறார் உதயநிதி. தற்போது அவரை எம்எல்ஏவாக்க திட்டமிட்டுள்ள ஸ்டாலின் அவரை பல்வேறு இடங்களுக்கு பரப்புரைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே கட்சிக்குள் உதயநிதி தலையீடு அதிகமாக உள்ளதாக எம்எல்ஏ குக செல்வம் கட்சியிலிருந்து வெளியேறினார்.

இதனிடையே ஜெ. அன்பழகன் மறைவால் காலியாக உள்ள சேப்பாக்கம் தொகுதியில் இடைத்தேர்தல் வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்பமனுவை தாக்கல் செய்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தலைவரும் பொதுச்செயலாளரும் வாய்ப்பளித்தால் வெற்றிப்பெறுவேன் என பேட்டியளித்தார். இதனிடையே பாஜக சார்பில் நடிகை குஷ்புவை சேப்பாக்கம் தொகுதியில் நிறுத்த அக்கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.