×

குஜராத்தில் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா…. பின்னணியில் பா.ஜ.க.?

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் நேற்று முன்தினம் வழங்கினர். இன்னும் 10 நாட்களில் ராஜ்யசபா தேர்தல் நடக்க உள்ளநிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. குஜராத்தில் 4 மாநிலங்களவை உறுப்பிர்களுக்கான தேர்தல் இம்மாதம் 26ம் தேதி நடைபெற உள்ளது. குஜராத் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 182 இடங்களில் ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கு 103 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதேசமயம் காங்கிரசுக்கு 73 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதன்படி பார்த்தால் பா.ஜ.க.வும்,
 

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் நேற்று முன்தினம் வழங்கினர். இன்னும் 10 நாட்களில் ராஜ்யசபா தேர்தல் நடக்க உள்ளநிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

குஜராத்தில் 4 மாநிலங்களவை உறுப்பிர்களுக்கான தேர்தல் இம்மாதம் 26ம் தேதி நடைபெற உள்ளது. குஜராத் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 182 இடங்களில் ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கு 103 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதேசமயம் காங்கிரசுக்கு 73 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதன்படி பார்த்தால் பா.ஜ.க.வும், காங்கிரசும் தலா 2 ராஜ்யசபா இடங்களில் எளிதாக வெற்றி பெறலாம். இருப்பினும், காங்கிரசுக்கு கூடுதலாக ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு இருந்தால் மட்டுமே இரண்டாவது உறுப்பினர் வெற்றி பெற முடியும் இல்லை என்றால் ஒரு இடம்தான் கிடைக்கும்.

இந்நிலையில் பா.ஜ.க. ராஜ்யசபா தேர்தலில் 3 உறுப்பினர்களை நிறுத்தியுள்ளது. பா.ஜ.க. கூடுதலாக நிறுத்தியுள்ள ஒரு வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமானால் அந்த கட்சிக்கு கூடுதலாக 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மாற்றி ஓட்டு போட வேண்டும் அல்லது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாற வேண்டும் இது நடந்தால் மட்டுமே சாத்தியம்.

இந்நிலையில், குஜராத் காங்கிரஸை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகர் ராஜேந்திர சூா்யபிரசாத் திரிவேதிடம் வழங்கி உள்ளனர். அதனை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார். இது குறித்து சபாநாயகர் திரிவேதி கூறுகையில், 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அளித்த ராஜினாமாவை ஏற்றுக் கொண்டேன். ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் யார் என்பதை நாளை சட்டப்பேரவையில் தெரிவிப்பேன் என தெரிவித்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததையடுத்து அந்த கட்சியின் பலம் 69ஆக குறைந்தது. இதனால் அந்த கட்சியால் ராஜ்யசபாவுக்கு 2வது உறுப்பினரை தேர்ந்தெடுக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பின்னணியில் பா.ஜ.க. உள்ளதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.