×

காவல்துறை அதிகாரியை கேவலமாகப் பேசிய.பிஜேபி பிரமுகர் கைது..!?

‘ டேய் உங்கப்பன் ,கீரக்கட்ட தலையுல் சுமந்து வித்தவன் தானடா,உனக்கு ஏசி ரூம் இனோவா காரா? உன்ன விடமாட்டண்டா’ இந்த வீர வசனத்தை பேசியவர் மயிலாடுதுறை பிஜேபி பிரமுகர் அகோரம் பேசப்பட்டது,உதவி ஆய்வாளர் ராம மூர்த்தியைப் பற்றி.காரணம் அறிய நாம் நான்கு ஆண்டுகள் பின்னோக்கிப் போகவேண்டும். ‘ டேய் உங்கப்பன் ,கீரக்கட்ட தலையுல் சுமந்து வித்தவன் தானடா,உனக்கு ஏசி ரூம் இனோவா காரா? உன்ன விடமாட்டண்டா’ இந்த வீர வசனத்தை பேசியவர் மயிலாடுதுறை பிஜேபி பிரமுகர் அகோரம்
 

‘ டேய் உங்கப்பன் ,கீரக்கட்ட தலையுல் சுமந்து வித்தவன் தானடா,உனக்கு ஏசி ரூம் இனோவா காரா? உன்ன விடமாட்டண்டா’ இந்த வீர வசனத்தை பேசியவர் மயிலாடுதுறை பிஜேபி பிரமுகர் அகோரம் பேசப்பட்டது,உதவி ஆய்வாளர் ராம மூர்த்தியைப் பற்றி.காரணம் அறிய நாம் நான்கு ஆண்டுகள் பின்னோக்கிப் போகவேண்டும்.

‘ டேய் உங்கப்பன் ,கீரக்கட்ட தலையுல் சுமந்து வித்தவன் தானடா,உனக்கு ஏசி ரூம் இனோவா காரா? உன்ன விடமாட்டண்டா’ இந்த வீர வசனத்தை பேசியவர் மயிலாடுதுறை பிஜேபி பிரமுகர் அகோரம் பேசப்பட்டது,உதவி ஆய்வாளர் ராம மூர்த்தியைப் பற்றி.காரணம் அறிய நாம் நான்கு ஆண்டுகள் பின்னோக்கிப் போகவேண்டும்.

இப்போதைய பிஜேபி பிரமுகர்  மாவீரன் அகோரம் 2014ல் பாமகவின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்.சீர்காழியை அடுத்த.செம்பனார்கோவில் மேல முக்கூட்டில் ஒரு பாமக பிரமுகர் இருந்தார்.அவர் பெயர் கா.அ.மூர்த்தி.அவர் பாமகவின் மாநிலத் துணை தலைவர்.

2014 ம் ஆண்டு ஜூன் 29 ம்தேதி மூர்த்தி பயணம் செய்த காரின் மீது குண்டு வீசி அவரை வெட்டிக் கொன்றது ஒரு கூலிப்படை.இதற்கு காரணம் அன்று பாமகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்த அகோரம் என்று பாமகவினர் வெளிப்படையாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப் பட்டார்.

அதைத் தொடர்ந்து அகோரம் ஆலந்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அதன்  பிறகு அரசியல் அநாதை ஆகிவிட்ட அகோரம்,கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பிஜேபியில் இணைந்து மாவீரன் அகோரம் ஆனார்.இந்த நிலையில் செம்பனார்கோவில் கா.அமூர்த்தி வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது.
அந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியாக ஆஜரான உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி கோர்ட்டில் ஆஜராகி சாட்சியமளித்தார்.

இதைத் தொடர்ந்து மயிலாடு துறையில் கடந்த நவம்பர் 1ம் தேதி நடந்த பிஜேபி கூட்டத்தில் கலந்து கொண்ட அகோரம் மைக்கை பிடித்ததும் அயோத்தி  ,காஷ்மீர் பிரட்சினைகளை எல்லாம் விட சீரியசான தன் சொந்தப் பிரட்சினையை கையில் எடுத்தார்.தனக்கு எதிராக சாட்சியமளித்த உதவி ஆய்வாளர் ராமமூர்த்தியை ஏக வசனத்தில் அழைத்து,அவருடைய தந்தை தலையில் சுமந்து கீரை விற்றதைச் சொல்லி,’ உனக்கெல்லாம்,இனோவா காராடா என்று தொடங்கி பிரசுரிக்க முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்திருக்கிறார்.அதோடு உன்னை ஒழித்து விடுவேன் என்று மிரட்டலும் விட்டிருக்கிறார் மாவீரன் அகோரம்

இந்த நற்றமிழ் உரையை யாரோ செல்ஃபோனில் படம் பிடித்து வலைத்தளத்தில் பதிவிட அது வைரலாகிவிட்டது.அதைப் பார்த்த உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி, மயிலாடுதுறை போலீசில் புகார் கொடுத்தார். அரசு ஊழியரை மிரட்டுதல் உட்பட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த மயிலாடு துறை காவல் துறை நேற்று மாவீரன் அகோரத்தைக் கைது செய்தது.