×

காடுவெட்டி குருவின் குடும்பத்துடன் சமரசம்… ராமதாசிடம் சரண்டரான குருவின் மகன்..!

குடும்ப சண்டை இருந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் நடந்த பாமக தலைவர் ராமதாஸ் முத்துவிழாவில் குருவின் மகன் கனலரசன் தனது தாய் சொர்ணலதாவோடு கலந்துகொண்டது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. பா.ம.கவின் வன்னியர் சங்கம் ஆரம்பித்த காலம் முதலே ராமதாஸுடன் இருந்தவர் மாவீரன் காடுவெட்டி குரு. ராமதாசின் இன்னொரு மகன் என்று சொல்லும் அளவுக்கு செல்வாக்குடன் இருந்தார். கட்சி வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டு வந்த குருவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த
 

குடும்ப சண்டை இருந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் நடந்த பாமக தலைவர் ராமதாஸ் முத்துவிழாவில் குருவின் மகன் கனலரசன் தனது தாய் சொர்ணலதாவோடு கலந்துகொண்டது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

பா.ம.கவின் வன்னியர் சங்கம் ஆரம்பித்த காலம் முதலே ராமதாஸுடன் இருந்தவர் மாவீரன் காடுவெட்டி குரு. ராமதாசின் இன்னொரு மகன் என்று சொல்லும் அளவுக்கு செல்வாக்குடன் இருந்தார். கட்சி வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டு வந்த குருவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் கல்லீரல் தொற்று நோய் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த வருடம் உயிரிழந்தார்.

அவர் மறைவுக்கு பிறகு  குடும்பம் இரண்டாக உடைந்துபோனது. “என் அம்மாவை சொந்தக்காரங்க கிட்ட இருந்து எப்படியாவது மீட்டு தந்து விடுங்கள்” என்று மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன்  பேசும் அளவு விசயம் வெளிச்சத்துக்கு வந்தது.

சொத்து பிரச்சனை காரணத்திற்காக காடுவெட்டி குருவின் மனைவி லதா ஒரு பக்கமும், மகள் விருதாம்பிகை, மகன் கனலரசன் மற்றொரு பக்கமுமாக இருந்தனர். இந்த விவகாரத்தில் ராமதாசின் தலையீடு தான் காரணம் என்று கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.

அதுமட்டுமல்லாமல் கல்லீரல் தொற்று நோய் காரணமாக குரு பாதிக்கப்பட்ட போது சிகிச்சைக்காக அவரை வெளிநாடு அழைத்துச் செல்லாதது ஏன்? என அப்போதே குருவின் சகோதரிகள் மற்றும் உறவினர்கள் வருத்தப்பட்டனர். இந்த விவகாரத்தில் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், என்ன சமாதானம் சொன்னாலும் பணத்திற்காக குருவை பாமக கைகழுவி விட்டது அவர்களின் குற்றச்சாட்டாக இருந்து வந்தது.

குருவின் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கும் இடையே எந்த ஒரு கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர்களை ஒன்று சேர்க்க வேண்டியது ராமதாசின் கடமையல்லவா? குருவின் குடும்பம் நியாயத்திற்காக தெருவிற்கு வர ராமதாஸ் விட்டிருக்கலாமா? என்பதே குருவிற்கு நெருக்கமானவர்களின் ஆதங்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில் குடும்ப சண்டை இருந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் நடந்த பாமக தலைவர் ராமதாஸ் முத்துவிழாவில் குருவின் மகன் கனலரசன் தனது தாய் சொர்ணலதாவோடு கலந்துகொண்டது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. விழாவில் கனலரசன் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியானதை அடுத்து  குருவின் குடும்பத்துக்கும் பாமக தலைமைக்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டதா என்ற கேள்வி பாமக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.