×

கவர்னர் ஆகிறார் அதிமுக முன்னாள் எம்.பி… ஓ.பி.எஸ் – எடப்பாடிக்கு எதிராக மோடி கொடுக்கும் ஷாக்..!

அவரின் சந்திப்பு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் , ஓ.பி.எஸுக்கும் தேள் கொட்டியது போல் ஆகி விட்டது. அதிமுக சார்பாக இரு முறை ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மைத்ரேயன். அதிமுக பிரிந்த பிறகு ஓ.பி.எஸ் அணியில் இருந்தார். மீண்டும் தனக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி கேட்டு அதிமுக தலைமையிடம் முட்டி மோதிப் பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. ராஜ்ய சபா பதவி இழந்த எம்பி மைத்ரேயனுக்கு மோடியின் பார்வை பலன் தரும் என்கிறார்கள். அவர் ஏற்கெனவே பாஜகவில் இருந்து
 

அவரின் சந்திப்பு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் , ஓ.பி.எஸுக்கும் தேள் கொட்டியது போல் ஆகி விட்டது.

அதிமுக சார்பாக இரு முறை ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மைத்ரேயன். அதிமுக பிரிந்த பிறகு ஓ.பி.எஸ் அணியில் இருந்தார்.  மீண்டும் தனக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி கேட்டு அதிமுக தலைமையிடம் முட்டி மோதிப் பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. 

ராஜ்ய சபா பதவி இழந்த எம்பி மைத்ரேயனுக்கு  மோடியின்  பார்வை பலன் தரும் என்கிறார்கள்.  அவர் ஏற்கெனவே பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு வந்தவர். அவர் கட்சி மாறுகிறாரா?  இல்லையா?  என்பது வேறு விஷயம். ஆனால், நிச்சயமாக அவரை ஒரு மாநிலத்தின் கவர்னர் அல்லது மத்தியில் ஒரு முக்கியமான பதவியில்  அமர்த்த  அமித் ஷாவும், மோடியும்  தீர்மானித்து விட்டாதாக சொல்கிறார்கள்.  

அதன் அச்சாரம்தாம் பதவி ஓய்வுக்கு பிறகு மோடியை  மைத்ரேயன் தனியாக சந்தித்து பேசியதுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அப்போது இருவரும் பல்வேறு விஷயங்களை  பேசி இருக்கிறார்கள்.  எல்லாம் பாசிட்டிவ்வாக இருந்ததாக சொல்கிறார்கள். அவரின் சந்திப்பு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் , ஓ.பி.எஸுக்கும் தேள் கொட்டியது போல் ஆகி விட்டது.  உடனடியாக டெல்லியில் உள்ள தமிழக அதிகாரிகளுக்கு போன்  செய்து என்ன நடந்தது..? 

அப்பாயின்மென்ட் யாரை கேட்டு வாங்கி கொடுத்தீர்கள். உள்ளே பேசிய விஷயங்கள் அனைத்தும் எனக்கு வந்து சேர வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளதாம். அவர்களும் தகவல்களை சேகரிக்கும் பணியில்  ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.