×

‘கலைஞர் இல்லனாலும் என் தளபதி இருக்காரு’.. திமுக பேரணியில் கலந்து கொண்ட 85 வயது முதியவர் !

ஓசூரில் வசித்து வரும் சூரப்பா என்பவருக்கு 85 வயது. இவர் இன்று காலை ஓசூரில் இருந்து வரும் முதல் ரயிலிலேயே சென்னைக்கு வந்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுக தலைமையில் பேரணி நடைபெற்றது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. திமுக கூட்டணி காட்சிகளின் பேரணி சென்னை எழும்பூரில் இருந்து தொடங்கிய பேரணி புதுப்பேட்டை வழியாக சென்று ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது. திமுக தலைவர் ஸ்டாலின், ப.சிதம்பரம், வீரமணி, திருமாவளவன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து
 

ஓசூரில் வசித்து வரும் சூரப்பா என்பவருக்கு 85 வயது. இவர் இன்று காலை ஓசூரில் இருந்து வரும் முதல் ரயிலிலேயே சென்னைக்கு வந்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுக தலைமையில் பேரணி நடைபெற்றது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. திமுக கூட்டணி காட்சிகளின் பேரணி சென்னை எழும்பூரில் இருந்து தொடங்கிய பேரணி புதுப்பேட்டை வழியாக சென்று ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது.   திமுக தலைவர் ஸ்டாலின், ப.சிதம்பரம், வீரமணி, திருமாவளவன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில், குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 

இருப்பினும் அந்த பேரணியில் கலந்து கொண்ட முதியவரின் கவனம் அனைவரையும் ஈர்த்துள்ளது. ஓசூரில் வசித்து வரும் சூரப்பா என்பவருக்கு 85 வயது. இவர் இன்று காலை ஓசூரில் இருந்து வரும் முதல் ரயிலிலேயே சென்னைக்கு வந்துள்ளார். அவர் கையில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய் என்ற பதாகையை ஏந்திய படி பேரணியில் கலந்து கொண்டார். அவரிடம் திமுக உறுப்பினர் ஒருவர் பேசுகையில், ” என் பெயர் சூரப்பா. நான் பரம்பரையாக திமுகவில் இருக்கிறேன். எனக்கு 35 வயது ஆகிறது. கலைஞருக்காக உயிரையே கொடுப்பேன். கலைஞர் இல்லனாலும், என் தளபதி இருக்கிறார். இந்த போராட்டம் ஈழதமிழர்களுக்கு உரிமை கிடைக்கவில்லை என்று நடக்கிறது. திமுகவின் அனைத்து போராட்டத்திலும் கலந்து கொள்வேன்” என்று தெரிவித்தார். 

 

அவர் பேசிய இந்த விடியோவை திமுக உறுப்பினர் ஒருவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். வயது முதிர்வை பொருட்படுத்தாமல், நாட்டின் உரிமைக்காக ஓசூரில் இருந்து சென்னைக்கு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.