×

கலப்பட உணவுப் பொருட்களில் தமிழகம் முதலிடம்! டிடிவி தினகரன் அதிர்ச்சி தகவல்!

தமிழ்நாட்டில் பால் பாதுகாப்பில்லாத உணவு பொருளாக இருப்பதைப் போன்றே மற்ற உணவுப் பொருட்களும் பாதுகாப்பு இல்லாத நிலையில் விநியோகிப்படுவதாக மத்திய அரசு நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பால் பாதுகாப்பில்லாத உணவு பொருளாக இருப்பதைப் போன்றே மற்ற உணவுப் பொருட்களும் பாதுகாப்பு இல்லாத நிலையில் விநியோகிப்படுவதாக மத்திய அரசு நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என்று அமமுக பொதுச்
 

தமிழ்நாட்டில் பால் பாதுகாப்பில்லாத உணவு பொருளாக இருப்பதைப் போன்றே மற்ற உணவுப் பொருட்களும் பாதுகாப்பு இல்லாத நிலையில் விநியோகிப்படுவதாக மத்திய அரசு நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பால் பாதுகாப்பில்லாத உணவு பொருளாக இருப்பதைப் போன்றே மற்ற உணவுப் பொருட்களும் பாதுகாப்பு இல்லாத நிலையில் விநியோகிப்படுவதாக மத்திய அரசு நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நஞ்சு அதிகமிருப்பதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையம் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது. தமிழகத்தில் அதிகளவில் பொதுமக்கள் பால் பொருட்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பால் வளத்துறையின் அமைச்சரோ, தங்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பதைப் போல பேசியிருக்கிறார். இந்நிலையில் உணவுக் கலப்படத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையத்தின் ஆய்வுகளில் தெரியவந்திருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சி தருகிறது என்று கூறியிருக்கிறார். 

மேலும், மக்களின் உயிரோடு விளையாடும் இந்த அலட்சியமான செயல்பாடுகளை தமிழக அரசு உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், பால் மற்றும் ஏனைய உணவுப் பொருட்களின் தரத்தினை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னுரிமை கொடுத்து மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.