×

கருணாநிதி சிலை திறப்பு விழா; சோனியாகாந்தியை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்

கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை சோனியாகாந்தியை சந்தித்து மு.க.ஸ்டாலின் வழங்கினார். டெல்லி: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை சோனியாகாந்தியை சந்தித்து மு.க.ஸ்டாலின் வழங்கினார். மறைந்த திமுக தலைவரும், தமிழகத்தின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் வருகிற 16-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்று கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார். அன்று மாலை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ-வில் நடைபெறும் பிரம்மாண்ட
 

கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை சோனியாகாந்தியை சந்தித்து மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

டெல்லி: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை சோனியாகாந்தியை சந்தித்து மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மறைந்த திமுக தலைவரும், தமிழகத்தின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் வருகிற 16-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்று கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார். அன்று மாலை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ-வில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திலும் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசுகிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வார் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

இந்நிலையில், கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை சோனியா காந்தியிடம் நேரில் வழங்குவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். சோனியா காந்திக்கு இன்று பிறந்த நாள் என்பதால் அவரது வீட்டுக்கு நேரில் சென்று முக ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கி விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். அதை சோனியா காந்தி ஏற்றுக் கொண்டார். இந்த சந்திப்பின் போது ராகுல் காந்தி, ஆ.ராசா, கனிமொழி, டிஆர் பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.