×

கனிமொழி வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

சிங்கப்பூர் பிரஜையான கனிமொழியின் கணவர் அரவிந்தனின் வருமானத்தைப் பற்றி வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை சென்னை : தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், கனிமொழி எம்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசையும் களம் கண்டனர். ஆனால் தமிழிசையை பின்னுக்குத் தள்ளி தூத்துக்குடி எம்பியாக வெற்றி பெற்றார் கனிமொழி. இதையடுத்து கனிமொழியின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கனிமொழி. அவர் தாக்கல்
 

சிங்கப்பூர் பிரஜையான கனிமொழியின் கணவர் அரவிந்தனின் வருமானத்தைப் பற்றி வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை

சென்னை : தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், கனிமொழி எம்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில்   சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசையும் களம் கண்டனர். ஆனால்  தமிழிசையை பின்னுக்குத் தள்ளி தூத்துக்குடி எம்பியாக வெற்றி பெற்றார் கனிமொழி. 

இதையடுத்து கனிமொழியின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கனிமொழி. அவர் தாக்கல் செய்த மனுவில்,சிங்கப்பூர் பிரஜையான கனிமொழியின் கணவர் அரவிந்தனின் வருமானத்தைப் பற்றி வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை, அதை மறைத்தது தவறு.  இதனால் கனிமொழியின் வேட்புமனு தாக்கலின்  போது  நான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால்  எனது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனால் கனிமொழியின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு இன்று  விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம், கனிமொழிக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.