×

கணவரை தொடர்ந்து கைதாகவுள்ள நளினி சிதம்பரம்?! அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர்!

சிபிஐ தரப்பில் 6வதாக கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் நளினி சிதம்பரத்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது. புதுடெல்லி: சாரதா சிட் ஃபண்ட் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் கைதாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2013ல் சாரதா சிட் ஃபண்ட் நிறுவனரான சுதிப்தா சென் பொதுமக்களிடம் ஏமாற்றிய 2,500 கோடி ரூபாயுடன் தலைமறைவானார். இந்த வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையிலிருந்து வந்த நிலையில் 2014ல் இந்த வழக்கு சிபிஐ வசம் சென்றது. இந்த வழக்கில் திரிணாமுல்
 

சிபிஐ தரப்பில் 6வதாக கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் நளினி சிதம்பரத்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது. 

புதுடெல்லி:  சாரதா சிட் ஃபண்ட் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி  நளினி சிதம்பரம் கைதாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2013ல்  சாரதா சிட் ஃபண்ட் நிறுவனரான சுதிப்தா சென் பொதுமக்களிடம் ஏமாற்றிய  2,500 கோடி ரூபாயுடன்  தலைமறைவானார். இந்த வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையிலிருந்து வந்த நிலையில் 2014ல் இந்த வழக்கு சிபிஐ வசம் சென்றது.

இந்த வழக்கில் திரிணாமுல் காங்கிரஸை  சேர்ந்த பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்பட்டது. இதனிடையே ப.சிதம்பரத்தின் மனைவியும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான நளினி சிதம்பரம்  சாரதா நிதி நிறுவனத்தின் சார்பில் ஆஜராகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக நளினிக்கு 2010 முதல் 2014 வரை வாதாடுவதற்காக 1.4 கோடி ரூபாயை கட்டணம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து கடந்த 2016 முதல் இந்த வழக்கில் நளினி சிதம்பரம் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் 6வதாக கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் நளினி சிதம்பரத்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது. 

இந்நிலையில் சாரதா சிட் ஃபண்ட் வழக்கில் நளினி சிதம்பரம் கைதாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் கைதாகி திஹார் சிறையில் உள்ள நிலையில் நளினி சிதம்பரம் கைதாக உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கலக்கத்தை  ஏற்படுத்தியுள்ளது.  

முன்னதாக சாரதா நிதி நிறுவனத்தின் விளம்பர துாதராக பணியாற்ற வழங்கப்பட 31 லட்சம் ரூபாயை திரிணாமுல் காங்., எம்.பி., சதாப்தி ராய் அமலாக்க துறையிடம், வரைவோலையாக திருப்பி அளித்தது குறிப்பிடத்தக்கது.