×

ஓராண்டு தலைவர் பதவியில் மு.க.ஸ்டாலின் சாதித்தது என்ன?

திமுக தலைவராக முக. ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டுக்காலம் முடிந்துள்ள நிலையில் எம்பி தயாநிதி மாறன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவராக முக. ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டுக்காலம் முடிந்துள்ள நிலையில் எம்பி தயாநிதி மாறன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக என்ற மாபெரும் பேரியக்கத்தின் தலைவராக அரசியல் தலைவர்களில் மூத்தவராகத் தமிழகத்தில் கோலோச்சி நின்ற கருணாநிதி என்ற ஆளுமை கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி தனது மூச்சை நிறுத்தி கொண்டது. அதன் பிறகு
 

திமுக தலைவராக முக. ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டுக்காலம் முடிந்துள்ள நிலையில் எம்பி தயாநிதி மாறன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 

திமுக தலைவராக முக. ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டுக்காலம் முடிந்துள்ள நிலையில் எம்பி தயாநிதி மாறன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 

திமுக என்ற மாபெரும் பேரியக்கத்தின்  தலைவராக அரசியல் தலைவர்களில் மூத்தவராகத் தமிழகத்தில் கோலோச்சி நின்ற கருணாநிதி என்ற ஆளுமை கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி தனது மூச்சை நிறுத்தி கொண்டது. அதன் பிறகு இந்த இயக்கத்தின் அடுத்த தலைவர் யார் ? என்ற சந்தேகமும், குழப்பமும் எந்த திமுக தொண்டன் மத்தியிலும் எழவில்லை. காரணம்  அடுத்த தலைவர் முக ஸ்டாலின் தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதற்கு வாரிசு அரசியல் மட்டும் காரணம் அல்ல. ஸ்டாலினின் அரசியல் பயணமும் தான் காரணம்  என்று மார்தட்டி கொள்வார்கள் திமுகவினர்.

அந்த வகையில் தந்தை இறந்து அவரது உடலை அடக்கம் செய்ய இடம் தரமறுத்த தமிழக அரசுக்கு எதிராக வழக்கு போட்டு  அதில் வென்று காட்டியதோடு கருணாநிதி உடல் அருகே நின்ற ஸ்டாலின் கதறி அழுதது மகன் என்ற பாச போராட்டத்தைத் தாண்டி ஒரு தலைவருக்கான  கம்பீரமும் கலந்திருந்தது. இதையடுத்து  சென்னை கலைஞர் அரங்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி திமுக தலைவராக பதவியேற்றார். அதாவது திமுகவினர் தளபதி என்று அழைக்கப்பட்ட ஸ்டாலின், தலைவராக அவர்கள் முன் முதன்முதலில் தோன்றினார். 

கடந்த 1976ஆம் ஆண்டு அரசியல் பயணத்தில் கலைஞருடன் நின்ற ஸ்டாலின் அவர் மறையும் வரை அவர் நிழலாகவே இருந்தார். ஸ்டாலின் திமுக தலைவராக பதவியேற்ற இந்த ஓராண்டுக் கால அரசியல் பயணத்தில் அவர் சாதித்து காட்டியது மக்களவை தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி தான். இதற்கு ஸ்டாலினின் பிரசாரமும் கூட்டணி வியூகமும் மிக முக்கியமான காரணம். இந்த வெற்றியானது ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்ற முழக்கத்தை ஒலிக்க செய்துள்ளது. இந்திய அளவில் அரசியல் கட்சி தலைவர்களின் உறவாக இருக்கட்டும், பாஜகவுக்கு எதிராக குரல் கொடுக்கும் முக்கிய ஆளுமைகளில் ஒருவராக ஸ்டாலின் பார்க்கப்படுவதாக இருக்கட்டும் , எதுவாக இருந்தாலும்  இந்திய அரசியலில் ஸ்டாலின் தனக்கான இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக அடைந்து வருகிறார் என்று சொல்லலாம். 

இருப்பினும்  திமுகவில்  குடும்ப அரசியல் நடக்கிறது என்பதை தனது மகனுக்கு தான் ஒருகாலத்தில் வகித்து வந்த இளைஞரணி தலைவர் பதவி கொடுத்து மீண்டும் ஒருமுறை உறுதி செய்தார் ஸ்டாலின். துண்டு சீட்டு ஸ்டாலின், ஸ்டாலின் குட்டிக்கரணம் போட்டாலும்  முதல்வராக முடியாது, அரசியல் நாகரீகமற்றவர் ஸ்டாலின், சட்டமன்றத்தில் கருத்து கூறிவிட்டு வாபஸ் பெறுவது  என்ற பல்வேறு விமர்சனங்கள் ஸ்டாலின் மீது தினந்தோறும் படிந்து கொண்டே இருக்கிறது. இதையெல்லாம் அவர் புறந்தள்ளி தன் இலக்கை நோக்கி பயணித்து வருகிறார். 

 திமுகவின் தளபதியாக இருந்த ஸ்டாலினின் செயல்பாடுகளை விட தலைவராக உள்ள ஸ்டாலின் இன்னும் கூடுதலாக செயலாற்றவேண்டும் என்பதே அனைவரது  விருப்பமாகவும்  உள்ளது