×

ஒரேநாளில் மாஸ் காட்டிய எம்.பி. ஜம்யாங் நம்கியாலின் உற்சாக நடனம்: வைரல் வீடியோ!

பா.ஜ. எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் மசோதாவை ஆதரித்து தீப்பொறி பறக்க பேசினார் லடாக் எம்.பி.யான ஜம்யாங் செரிங் நம்கியால் தொகுதி மக்களுடன் உற்சாக நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும் அம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மசோதாவை தாக்கல் செய்து அதற்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு ஆதரவும்,
 

பா.ஜ. எம்.பி. ஜம்யாங்  செரிங் நம்கியால் மசோதாவை ஆதரித்து தீப்பொறி பறக்க பேசினார்

லடாக் எம்.பி.யான ஜம்யாங்  செரிங் நம்கியால் தொகுதி மக்களுடன் உற்சாக நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. 

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும் அம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மசோதாவை தாக்கல் செய்து அதற்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.

இது தொடர்பான விவாதத்தின் போது, லடாக் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ. எம்.பி. ஜம்யாங்  செரிங் நம்கியால் மசோதாவை ஆதரித்து தீப்பொறி பறக்க பேசினார். கடந்த 70 ஆண்டுகளாக லடாக் மக்கள் யூனியன் பிரதேச அந்தஸ்துக்காகப் போராடி வருகிறார்கள். லடாக் முன்னேறாமல் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் சட்டப்பிரிவு 370 மற்றும் காங்கிரசும்தான் காரணம்.  காஷ்மீரை தங்களது மூதாதையர் சொத்து என்று நினைக்கிறார்கள். ஆனால் அது நீண்ட காலம் உண்மையாக இருக்காது எனச் சிறப்பு சட்டப்பிரிவு, காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் முன்னாள் முதல்வர்களை ஜம்யாங் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இவருடைய பேச்சு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் பாராட்டினார்கள். இதனால் ஒரேநாளில் ஜம்யாங்  செரிங் நம்கியால் பிரபலமானார்.

 

இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்து  ஊர் திரும்பிய ஜம்யாங் நம்கியாலுக்கு லே-வில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி, அவர் மக்களோடு சேர்ந்து நடனமாடி அவரையும் உற்சாகப்படுத்தினார்.