×

ஒரே நாளில் “பேராலயம் முதல் ஆதீனம்” வரை ஆசி பெற்ற எடப்பாடியார் : பின்னணி என்ன?

எளியவர்களின் முதல்வர் என பெயரெடுத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, அடுத்தக்கட்டமாக எல்லா மதங்களுக்கும் பொதுவானவராக உருவெடுத்திருக்கிறார். அவரது சமீபத்திய டெல்டா விசிட் இதனை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்கிறது. இயற்கை சீற்றங்களின்போது கோட்டையில் இருந்தபடி உத்தரவுகளை பிறப்பிக்காமல் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியாகக் களமிறங்கி ஆய்வு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் எடப்பாடி. இந்த வகையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்டத்தை அவர் அண்மையில் பார்வையிடச் சென்றிருந்தார். சேதப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த எடப்பாடி, அன்றிரவு வேளாங்கண்ணியில்
 

எளியவர்களின் முதல்வர் என பெயரெடுத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, அடுத்தக்கட்டமாக எல்லா மதங்களுக்கும் பொதுவானவராக உருவெடுத்திருக்கிறார். அவரது சமீபத்திய டெல்டா விசிட் இதனை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்கிறது.

இயற்கை சீற்றங்களின்போது கோட்டையில் இருந்தபடி உத்தரவுகளை பிறப்பிக்காமல் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியாகக் களமிறங்கி ஆய்வு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் எடப்பாடி. இந்த வகையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்டத்தை அவர் அண்மையில் பார்வையிடச் சென்றிருந்தார். சேதப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த எடப்பாடி, அன்றிரவு வேளாங்கண்ணியில் தங்கினார்.

மறுநாள் காலையில் புகழ்பெற்ற வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு சென்றார். அங்கு நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். பேராயர்கள் எடப்பாடிக்கு ஆசீர்வாதம் வழங்கினர். தேவாலய வளாகத்தில் திரண்டிருந்த திரளான கிறிஸ்தவ மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள நாகூர் தர்காவுக்கும் சென்றார். அங்கும் எடப்பாடிக்கு அசத்தலான வரவேற்பு தரப்பட்டது. தர்காவின் உட்பகுதி வரை அழைத்துச் செல்லப்பட்ட எடப்பாடிக்கு மத குருக்கள் ஆசி வழங்கினர். சிறிது நேரம் கண்மூடி பிரார்த்தனை செய்த அவர் காணிக்கையும் செலுத்தினார். சேதமடைந்துள்ள தர்கா குளத்தின் கரைகளை பார்வையிட்ட அவர், உடனடியாக அதனை சீர் செய்ய உத்தரவிட்டார்.

இதன் பின்னர் மயிலாடுதுறை சென்ற எடப்பாடி, தருமபுரம் ஆதீனத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஆதீனத்தின் 27வது மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

இது பற்றி முதல்வருடன் சென்ற அதிகாரிகளிடம் விசாரித்தால், ‘’ இது திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் அல்ல. முதல்வர் நாகை மாவட்டத்திற்கு வந்த பிறகு முடிவு செய்யப்பட்ட விஷயங்களே. அவரது எண்ணப்படியே எல்லாம் நடந்தது. எல்லா மதங்களையும், இனங்களையும் ஒன்றுபோல பாவிப்பதுதான் முதல்வரின் வழக்கமாக உள்ளது. அவரோடு நெருக்கமாக இருக்கும் எங்களைப் போன்றவர்கள் பல சந்தர்ப்பங்களில் இதனை நேரடியாக உணர்ந்திருக்கிறோம். எடப்பாடியை எல்லா தரப்பினரும் விரும்புவதற்கும், அவரது செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கும்’எம்மதமும் சம்மதம்’ என்கிற வழி நடப்பதும் ஒரு முக்கியக் காரணம்’’ என்றார்கள்.