×

ஒதுங்கிய சசிகலாவால் ஓங்கிய எடப்பாடியின் செல்வாக்கு!

ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதுபோல் பதவி கொடுத்த சசிகலாவையே ஓரங்கட்டிவிட்டார் திறமைசாலி எடப்பாடி பழனிசாமி. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கான செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளது. கட்சிக்குள் இருந்த கொஞ்ச நஞ்ச சலசலப்பும் ஓய்ந்தது. சசிகலாவின் முடிவும், எடப்பாடியின் எதிர்கால அரசியல் குறித்தும் நம்மிடம் பேசிய அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர், “ தொடக்கத்திலிருந்தே சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் ஓரங்கட்டியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதனால் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற பின்னர் டிடிவி தினகரனை
 

ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதுபோல் பதவி கொடுத்த சசிகலாவையே ஓரங்கட்டிவிட்டார் திறமைசாலி எடப்பாடி பழனிசாமி. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கான செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளது. கட்சிக்குள் இருந்த கொஞ்ச நஞ்ச சலசலப்பும் ஓய்ந்தது.

சசிகலாவின் முடிவும், எடப்பாடியின் எதிர்கால அரசியல் குறித்தும் நம்மிடம் பேசிய அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர், “ தொடக்கத்திலிருந்தே சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் ஓரங்கட்டியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதனால் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற பின்னர் டிடிவி தினகரனை ஓரங்கட்டி, அவரை புறக்கணித்துவந்தா. ஆனால் சசிகலா சிறையிலிருந்து வந்த பின் நிலைமை தலைகீழாக மாறும் என டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், ஒரே ஒரு அறிக்கை மூலம் அனைத்து சலசலப்பையும் ஆஃப் செய்தார் சசிகலா.

சிறையிலிருந்து விடுதலையான அன்று வெளியில் வீரமாக தலைகாட்டிய சசிகலா, சென்னை வந்த பின்னர்வீட்டுக்குள் முடங்கி விட்டார். எத்தனையோ அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தன்னை வந்து பார்ப்பார்கள், தொண்டர்கள் வீட்டின் முன் தவம் கிடப்பார்கள் என்னெற்றாம் எதிர்பார்த சசிகலாவுக்கு அதிமுகவினரின் எதிர்ப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை. சீமான், பாரதிராஜா, நடிகர் பிரபு உள்ளிட்ட திரைபிரபலங்களே சசிகலாவை பார்த்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவரும் அவர் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

கூட்டணி கட்சி என்ற நட்புணர்வு அடிப்படையில், பாஜக கூட சசிகலாவைச் சேர்க்கலாமே எனச் சொல்லி பார்த்தது. கடந்த மாதம் டெல்லி சென்ற எடப்பாடி, பிரதமர் மோடியைச் சந்தித்து அந்த பேச்சுவார்த்தைக்கும் ஒரு எண்ட் கார்டு போட்டார். எவ்வளவோ முட்டி மோதி பார்த்த சசிகலா, இதுக்கு மேலையும் எடப்பாடி பழனிசாமியிடம் போட்டிப்போடக்கூடாது என எண்ணி அரசியலிலிருந்து விலகுவதாக அறிக்கையை வெளியிட்டார். இதற்கான பெருமையெல்லாம் எடப்பாடியையே சாரும்” எனக் கூறினார். இனி என்ன எடப்பாடி சொன்னதுபோலவே வெற்றிநடை போடும் தமிழகமே…. வெற்றிநடை போடும் அதிமுகவே… ஜெயலலிதா மறைவுக்கு பின் ஆட்சியை கையில் பிடித்த எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சி திறமையை வெளிப்படுத்தினார். தற்போது அரசியல் ஆளுமையை நிரூபித்துள்ளார்.