×

ஐஐடி-யில் இவ்வளவு பிரிவினையா… கேரள அமைச்சர் வேதனை!

ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சாதி, மத அடிப்படையில் பிரிவினைகள் இருப்பது வேதனை அளிக்கிறது என்று கேரள உயர் கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடி-யில் படித்து வந்த கேரள மாணவி பாத்திமா தற்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சாதி, மத அடிப்படையில் பிரிவினைகள் இருப்பது வேதனை அளிக்கிறது என்று கேரள உயர் கல்வித்
 

ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சாதி, மத அடிப்படையில் பிரிவினைகள் இருப்பது வேதனை அளிக்கிறது என்று கேரள உயர் கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடி-யில் படித்து வந்த கேரள மாணவி பாத்திமா தற்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சாதி, மத அடிப்படையில் பிரிவினைகள் இருப்பது வேதனை அளிக்கிறது என்று கேரள உயர் கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடி-யில் படித்து வந்த கேரள மாணவி பாத்திமா தற்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்தநிலையில், மாணவி பாத்திமாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறுவதற்காக கேரள உயர் கல்வித் துறை அமைச்சர் ஜலீல் வந்தார். அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது, “பாத்திமா அதிக திறமை உள்ளவர். இதுவரை அவர் படித்த படிப்புகளின் சான்றிதழ், தற்போது முதல் செமஸ்டரில் அவர் பெற்ற இன்டர்னல் மதிப்பெண்ணைப் பார்த்தால் அது தெரியும். உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் சாதி, மதத்தின் பெயரால் பிரிவினை இருப்பதை தனி கவனத்துடன் பார்க்க வேண்டும். 
கடந்த ஐந்து ஆண்டுகளில் நம் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பல ஆசிரியர்கள் மனதில் உறங்கிக்கொண்டிருந்த விஷயங்களை வெளிக்கொண்டுவந்துள்தோ என்று தோன்றுகிறது. மத்திய அரசு இதுகுறித்து தனி கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், திறமைமிக்க மாணவர்கள் இதுபோன்ற கல்வி நிலையங்களுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
ஐ.ஐ.டி போன்ற கல்வி நிலையங்களில் பிரிவினை இருப்பதாக செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. நாம் நினைத்துப் பார்க்காத இடங்களில் எல்லாம் பிரிவினைகள் நடக்கின்றன. கல்வியறிவு அதிகரித்தால் பிரிவினைகள் குறையும் என்று நினைக்கிறோம். ஆனால், அதற்கு எதிராகவே நடக்கிறது. 

பாத்திமா எழுதிய கடிதத்தை படித்தால், அவர் எந்த மாதிரியான கஷ்டத்தை அனுபவித்தார் என்பது தெரியும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழக முதல்வரிடம் கேரள முதல்வர் பேசியுள்ளார். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.
மத்திய அரசும் கூடுதல் கவனம் செலுத்தி இதுபோன்ற செயல்கள் நடைபெறுவதைத் தடுக்க வேண்டும். இதே நிலை நீடித்தால், பிள்ளைகள் இதுபோன்ற கல்வி நிறுவனங்களுக்கு சென்று படிக்கவே பயப்படுவார்கள். தேர்வில் இன்டேர்னல் மதிப்பெண் மூலம் ஒரு ஆசிரியர் நினைத்தால் மாணவர் ஒருவரை தோற்கடிக்க முடியும் என்ற நிலையை கேரளாவில் மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.
ஐஐடி-யில் பிரிவினை உள்ளது என்று மாநில அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.