×

ஏமாற்றம் தரும் பிரதமர்! – சீமான் வேதனை

நாடு முழுக்க கொரோனாவை எதிர்கொள்ள பொருளாதார உதவிகளை வழங்கும்படி மக்கள் கேட்டு வருகின்றனர். எந்த ஒரு உதவியும் கிடைக்காத நிலையில், வாழ வழியின்றி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருகின்றனர். அப்படி வருபவர்களையும் அடித்து துன்புறுத்துகிறது போலீஸ். தொலைக்காட்சி மூலமாக மூன்றாவது முறையாக பேசிய மோடி, மற்றவர்களுக்கு உதவுங்கள் என்று தன்னுடைய பொறுப்பைக் கைகழுவிவிட்டார். கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள எந்த ஒரு நிதி உதவியையும் பிரதமர் அறிவிக்காதது ஏமாற்றத்தைத் தருகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
 
நாடு முழுக்க கொரோனாவை எதிர்கொள்ள பொருளாதார உதவிகளை வழங்கும்படி மக்கள் கேட்டு வருகின்றனர். எந்த ஒரு உதவியும் கிடைக்காத நிலையில், வாழ வழியின்றி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருகின்றனர். அப்படி வருபவர்களையும் அடித்து துன்புறுத்துகிறது போலீஸ். தொலைக்காட்சி மூலமாக மூன்றாவது முறையாக பேசிய மோடி, மற்றவர்களுக்கு உதவுங்கள் என்று தன்னுடைய பொறுப்பைக் கைகழுவிவிட்டார்.

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள எந்த ஒரு நிதி உதவியையும் பிரதமர் அறிவிக்காதது ஏமாற்றத்தைத் தருகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க கொரோனாவை எதிர்கொள்ள பொருளாதார உதவிகளை வழங்கும்படி மக்கள் கேட்டு வருகின்றனர். எந்த ஒரு உதவியும் கிடைக்காத நிலையில், வாழ வழியின்றி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருகின்றனர். அப்படி வருபவர்களையும் அடித்து துன்புறுத்துகிறது போலீஸ். தொலைக்காட்சி மூலமாக மூன்றாவது முறையாக பேசிய மோடி, மற்றவர்களுக்கு உதவுங்கள் என்று தன்னுடைய பொறுப்பைக் கைகழுவிவிட்டார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்வீட் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். 
அதில், “நாட்டிலுள்ள வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பங்கள், தினக்கூலி அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு, குறு தொழில்முனைவோர்கள், வீதிகளில் வாழும் இலட்சக்கணக்கான மக்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற முதியவர்கள், மனநலம் குன்றியவர்கள், பிச்சைக்காரர்கள் உள்ளிட்ட பலகோடிக்கணக்கான ஏழை , எளிய மக்கள் வாழும் நாட்டில் அவர்களின் தினசரி உணவு மற்றும் இதர அத்தியாவசியத் தேவைகளை வழங்குவது குறித்தோ அல்லது அதை வாங்குவதற்குத் தேவையான நிதியை வழங்குவது குறித்தோ தனது அறிவிப்பில் எதுவும் பிரதமர் வெளியிடாதது மிகுந்த ஏமாற்றத்திற்குரியது” என்று கூறியுள்ளார்.